Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

12-வது பிரிக்ஸ் நாடாளுமன்றக் கூட்டம் நாளை தொடக்கம்… இந்தியா – ரஷ்யா ஆலோசனை! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 25, 2026
in அரசியல் செய்திகள்
0
12-வது பிரிக்ஸ் நாடாளுமன்றக் கூட்டம் நாளை தொடக்கம்… இந்தியா – ரஷ்யா ஆலோசனை! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 25, 2026 10:18 PM IST

இந்திய நாடாளுமன்றம், 12-வது பிரிக்ஸ் நாடாளுமன்றக் கூட்டமைப்பின் கூட்டத்தை நடத்தவுள்ளது. நாளை (2026 அக்டோபர் 26) தொடங்கும் இக்கூட்டம் இரண்டு நாள்கள் நடைபெறும்

இந்திய நாடாளுமன்றம்
இந்திய நாடாளுமன்றம்

இந்திய நாடாளுமன்றம், 12-வது பிரிக்ஸ் நாடாளுமன்றக் கூட்டமைப்பின் கூட்டத்தை நடத்தவுள்ளது. நாளை (2026 அக்டோபர் 26) தொடங்கும் இக்கூட்டம் இரண்டு நாள்கள் நடைபெறும். இந்தக் கருத்தரங்கிற்கு முன்னதாக, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, ரஷ்ய நாடாளுமன்ற தலைவர் வியாசெஸ்லாவ் வோலோடின் தலைமையிலான ரஷ்ய நாடாளுமன்றக் குழுவினருடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது, இந்திய – ரஷ்ய நாடாளுமன்றக் குழுக்கள், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு உலகளாவிய மன்றங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், கூட்டு முயற்சிகளையும் வலியுறுத்தின.

பிரிக்ஸ் நாடாளுமன்றங்களிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் ரஷ்யாவின் தீவிரப் பங்களிப்பை திரு ஓம் பிர்லா கோரினார். பருவநிலை மாற்றம், பயங்கரவாதம் உள்ளிட்ட தற்கால உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள கூட்டு முயற்சிகளின் அவசியத்தை அவர் எடுத்துரைத்ததோடு, மாறிவரும் உலகளாவிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப சர்வதேச நிறுவனங்களை மேலும் பொறுப்புடன் செயல்பட வைப்பதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டினார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் சீர்திருத்தங்கள் தேவை என்பதை திரு ஓம் பிர்லா மீண்டும் வலியுறுத்தியதோடு, அந்த சபையில் இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு ரஷ்யா அளித்துவரும் தொடர்ச்சியான ஆதரவிற்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, அணுசக்தி, தொழில்துறை, பிற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் திரு ஓம் பிர்லா எடுத்துரைத்தார். இருதரப்பு உறவுகளின் முக்கியத் தூண்களாக விளங்கும் கலாச்சாரப் பரிமாற்றங்கள், மக்கள் தொடர்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், இந்திய – ரஷ்ய மக்கள் பகிர்ந்து கொள்ளும் ஆழ்ந்த நட்பும், நல்லெண்ணமும், ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்குகிறது என்று குறிப்பிட்டார். பின்னர் ஓம் பிர்லா கியூபா, எகிப்து, பெலாரஸ் நாடுகளின் நாடாளுமன்றக் குழுக்களைச் சந்தித்து, கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.



.

Previous Post

"புதிதாக ஒரு நடிகரை கட்சி ஆரம்பிக்க வைப்பது RSS-இன் திட்டம்" – என்ன சொல்கிறார் மாணிக்கம் தாகூர்?

Next Post

அட்டைப்படம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அட்டைப்படம்

அட்டைப்படம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In