Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“ராஜீவ் காந்தியை கண்டதும் காதல் கொண்டது எப்படி?” – மனம் திறந்த சோனியா காந்தி! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 25, 2026
in அரசியல் செய்திகள்
0
“ராஜீவ் காந்தியை கண்டதும் காதல் கொண்டது எப்படி?” – மனம் திறந்த சோனியா காந்தி! | India News (இந்தியா செய்திகள்)
2
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 25, 2026 6:47 AM IST

ராஜீவ் காந்தியுடனான முதல் சந்திப்பு மற்றும் காதல் அனுபவங்களை சோனியா காந்தி தனது சுயசரிதை நூலில் பகிர்ந்துள்ளார்.

News18
News18

இங்கிலாந்தில் உள்ள ஒரு சிறிய உணவகத்தில் ராஜீவ் காந்தியை பார்த்த முதல் சந்திப்பிலேயே காதல் கொண்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மனம் திறந்துள்ளார். 60 ஆண்டுகளுக்கு முன்பு மலர்ந்த காதல் கதையை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

முதல் பார்வையிலேயே காதலில் விழுந்தது குறித்து சோனியா காந்தி பகிர்ந்துள்ள வீடியோ, அவரது சுயசரிதையான ‘Belonging: A Journey of Love’ என்ற புத்தகத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் – காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சோனியா காந்தியும் 1968 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்தியாவில் அரசியல் செல்வாக்கு கொண்ட குடும்பத்தில் பிறந்த ராஜீவுக்கும், இத்தாலி நாட்டைச் சேர்ந்த சோனியாவுக்கும் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜில் காதல் மலர்ந்தது.

தற்போது 79 வயதாகும் சோனியா ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ என்ற சுயசரிதை நூலை எழுதியுள்ளார். அதில், 60 ஆண்டுகளுக்கு முன்பு ராஜீவ் காந்தி உடனான சந்திப்பு உள்ளிட்ட சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் சோனியா, கடந்த 22 ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் இணைந்தார். இதையடுத்து, தனது சமூக வலைதள பக்கத்தில் ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆப் லவ்’ புத்தகத்தில் இடம்பெற்றுள்ள காதல் காவியத்தின் டிரெய்லர் போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தனது வாழ்வின் அன்பு, காதல், கடமை, இழப்பு போன்றவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் நாளுக்காக ஆவலாக காத்திருப்பதாக கூறியுள்ளார். அத்துடன், 1965 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் இருந்த ஒரு சிறிய கிரேக்க உணவகத்தில் ராஜீவ் காந்தியை சந்தித்தது குறித்த இனிமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். “முதல் சந்திப்பிலேயே அவர் எனக்கான நபர் என்பதை உணர்ந்தேன். ராஜீவ் காந்தியும் என்னை போல் உணர்ந்தார் என்பதை தெரிந்துகொண்டேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார் சோனியா காந்தி.

அதேபோல், ராஜீவ் காந்தியிடம் இருந்த இயல்பான நற்பண்பும், சாந்தமான சுபாவமுமே தன் மனதைக் கவர்ந்ததாகவும், அன்பு, சிரிப்பு மற்றும் நினைவுகள் நிறைந்த ஒரு உலகத்தை தாங்கள் உருவாக்கியதாகவும் கூறியுள்ள சோனியா காந்தி, நவம்பர் 10 ஆம் தேதி, அந்த உலகத்தை முழுமையாக மக்களுடன் பகிர்ந்து கொள்ள இருப்பதாகவும் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். கேம்பிரிட்ஜில் காதல் தினத்தை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடிய பசுமையான நினைவுகளை குறிப்பிட்டுள்ள சோனியா, ராஜீவ் காந்தி மிகவும் அழகானவர் என்று சிலாகித்துள்ளார்.

சோனியா காந்தியின் சுயசரிதை நூலை இந்தியாவில் ஹார்பர்காலின்ஸ் என்ற நிறுவனம் வருகின்ற நவம்பர் 10 ஆம் தேதி வெளியிடுகிறது. 544 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தில் சோனியாவின் குழந்தைப் பருவம் தொடங்கி, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி படுகொலை, இந்திய அரசியலில் அவரின் பங்கு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சோனியாவின் ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ புத்தகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



.

Previous Post

ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: “எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம்” – ஓம் பிர்லா| Gyanesh Kumar’s resignation: “We will take action if opposition parties submit a notice” – Om Birla

Next Post

Pasumai Vikatan – 10 November 2026 – தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா… நீதி தவறும் மத்திய அரசு… பறிக்கப்படும் தமிழக விவசாயிகளின் உரிமைக

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Pasumai Vikatan – 10 November 2026 – தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா… நீதி தவறும் மத்திய அரசு… பறிக்கப்படும் தமிழக விவசாயிகளின் உரிமைக

Pasumai Vikatan - 10 November 2026 - தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா... நீதி தவறும் மத்திய அரசு... பறிக்கப்படும் தமிழக விவசாயிகளின் உரிமைக

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In