Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

"ரீல்ஸ் போட்டு கொண்டு சினிமா நடிகராக இருக்கலாமென நினைக்கிறார் முதலமைச்சர்" – செல்லூர் ராஜூ காட்டம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 24, 2026
in அரசியல் செய்திகள்
0
"ரீல்ஸ் போட்டு கொண்டு சினிமா நடிகராக இருக்கலாமென நினைக்கிறார் முதலமைச்சர்"  – செல்லூர் ராஜூ காட்டம்
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மருது பாண்டியர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை ஸ்காட் ரோடு பகுதியில் உள்ள மருது பாண்டியர்களின் சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் ராஜு, “மருது சகோதரர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறோம். மருது சகோதரர்களின்  நினைவு தினத்தில்  உறுதியேற்று கழகத்தை வளர்ச்சியோடு கொண்டு செல்வோம்.” என்றார்.

சுகாதாரத் துறையில் சமூக வலைத்தளங்களில் பொதுக்கூட்டங்களில் அரசுக்கு எதிராக கருத்து பதிவிடுவதற்கு எதிரான சுற்றறிக்கை தொடர்பான கேள்விக்கு…

“இது ஜனநாயக நாடு. ஏற்கனவே தவெகவின் தற்காலிக வெற்றியால் தற்குறி அரசாக மாறியிருக்கிறது. எப்போதுமே ஜனநாயகத்திற்கு ஏதாவது ஒன்று என்றால் தாங்கள் வழிநடத்த போவதாக சொல்வார்கள் நாட்டில் புதுமையை உருவாக்கப் போகிறோம் புது வளர்ச்சியை உருவாக்கப் போகிறோம் அனைவருக்கும் சுதந்திரம் என சொல்வார்கள் தவெகவின் தலைவரே அப்படிதான் பேசினார்.

கட்சி தொடங்கும் போது, ‘திராவிட இயக்கங்களுடைய ஆட்சியில் தமிழ்நாடு பாழாகி போனது என கூறினார். திராவிட இயக்கங்களின் ஆட்சியில் செய்த சிறப்பான சாதனையை தான் அவர் முன்னெடுத்து செல்ல வேண்டியுள்ளது அதை பின்பற்றி செல்ல வேண்டியுள்ளது.

விஜய்
விஜய்

இதுவரைக்கும் ஆறு மாதம் ஆகிவிட்டது புதுமையாக எதுவும் செய்யவில்லை அனைத்து பிரிவினரும் அரசு ஊழியர்கள் சார்ந்தவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் தீயை கொளுத்தி போட்டது போல  அரசு ஊழியர்கள் கருத்து சொல்லக்கூடாது என கூறுவது கருத்து சுதந்திரத்தை பறிக்கக்கூடிய சர்வாதிகாரியாக முதலமைச்சர் விஜய் மாறிவிட்டாரா? அல்லது அடிவருடிகள் அவரின் புகழ் பாடுகின்ற அமைச்சர்கள் அப்படி செய்கிறார்களா ? என தெரியவில்லை.

நாட்டில் ஏறி இருக்கக்கூடிய விலைவாசி ,சட்ட ஒழுங்கு பிரச்சனை ,மது போதை தாராளமாக நடைபெறுகிறது இதையெல்லாம் இந்த அரசு 6 மாதமாகியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை

சிங்கப்பெண் என சொல்லிக்கொண்டு ஒரு படை அமைத்தார்கள். இரண்டு பெண் சிறுமிகள் காணாமல் போய் குடும்பமே மிகப்பெரிய துன்பத்தில் ஆழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இது தொடர்கிறது

கடந்த ஆட்சியில் என்ன நடந்ததோ அதே தான் தொடர்கிறது எந்த ஒரு புதுமையும் செய்யவில்லை. ரீல்சை வச்சு ஆட்சியைப் பிடித்தவர்கள் ரியல் ஆட்சியை கொண்டு வந்தால் தான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

ரீல்ஸிலையே ஆட்சியையும் கட்சியையும் நடத்தி விடலாம் என நினைத்தால் மக்கள் நிச்சயமாக விரைவிலே இந்த அரசுக்கு சரியான பாடத்தை புகட்டுவார்கள்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

அதற்கு இந்த பண்டிகை காலத்தில் ஏறி இருக்கக்கூடிய விலைவாசி, ஆட்டோ தொழிலாளர்கள் மற்றவர்களுடைய ஏச்சுக்கும் பேச்சுக்கும் இந்த அரசு ஆள்பட்டிருக்கிறது.

நிர்வாகத்தை ஒழுங்காக செயல்படுத்தி என்ன மாற்றத்தை கொண்டு வரலாம் என சிந்தித்து செயல்படுத்த வேண்டும்

காவிரி நீர் பிரச்சனையில் எந்த ஒரு கவனமும் செலுத்தாத முதலமைச்சர் ஒரு தற்குறியான முதலமைச்சராக விஜய் இருக்கிறார் இங்கே காவிரி பிரச்சனையில் தீர்க்காமல் ஆந்திராவிற்கு செல்கிறார் எதற்காக சென்றார் என்ன என்பது தெரியவில்லை.

 இங்கு உள்ள காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மிகப்பெரிய துன்பத்தில் துயரத்திலும் இருக்கிறார்கள் இரண்டு போகம் சம்பாவும் குருவையும் அவர்களை ஏமாற்றி விட்டது

மழையில் இந்த அரசாங்கம் சரியாக நடவடிக்கை எடுக்காத நிலையில் காவிரி பிரச்சனையில் கர்நாடகா அரசை தன்னுடைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்ற காங்கிரஸ் இயக்கத்தின் உடைய தேசிய தலைவராக உள்ள கார்கே அல்லது ராகுல்ஜியை சந்தித்து கர்நாடக முதலமைச்சரிடம் சொல்லி குறைந்தபட்சம் 15 டிஎம்சி தண்ணீராயவது பெற்றிருக்க வேண்டும் அதுதான் இந்த முதலமைச்சரின் வெற்றியாக கருதுவார்கள்

ஆனால் அதனை கூட செய்ய முடியாத தற்குறி முதலமைச்சராக ரீல்ஸ் போட்டுகொண்டு இருக்கக்கூடிய முதலமைச்சராக இருக்கிறார் சினிமா நடிகராக தான் கதாநாயகனாக காட்சியளிக்க வேண்டுமென நினைக்கிறார்.

புஸ்ஸி ஆனந்த்
புஸ்ஸி ஆனந்த்

மழையால் எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் ஆனந்த் கூறியது தொடர்பான கேள்விக்கு?

அவர வர சொல்லி பார்க்க சொல்லுங்க கோட்டையிலிருந்து அமைச்சர்கள் பேட்டி கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் மக்கள் இங்கு என்ன துன்பப்படுகிறார்கள் துயரப்படுகிறார்கள் என தெரியவில்லை

சென்னையிலேயே மழை நீர் தேங்கி கொண்டு தான் உள்ளது அதற்கு வருவாய் துறை அமைச்சர்  இன்னும் 6 மாதம் காலம் கொடுங்கள் அதற்குள் இந்த மழைநீர் வடிகால்களை சீர்படுத்தி விடுவோம் என்கிறார்கள். அரசின் இயலாமையை அமைச்சரே ஒத்துக் கொள்ளக்கூடியது தான் . அரசின் செயல்பாடு எப்படி உள்ளது என அவரே சொல்லிவிட்டார்” என்றார்



.

Previous Post

பொதுவெளியில் AK 47 துப்பாக்கியால் சுட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி… சத்தீஸ்கர் அரசு எடுத்த நடவடிக்கை! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

”டெங்கு அதிகரிக்க தவெக-தான் காரணம், ஏனென்றால்.!” – மேயர் பிரியா குற்றச்சாட்டு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
”டெங்கு அதிகரிக்க தவெக-தான் காரணம், ஏனென்றால்.!” – மேயர் பிரியா குற்றச்சாட்டு

”டெங்கு அதிகரிக்க தவெக-தான் காரணம், ஏனென்றால்.!” - மேயர் பிரியா குற்றச்சாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In