Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

"பாஜகவால் அடையாளம் பெற்றவர் பாஜகவை விமர்சிக்கிறார்" – மீண்டும் அண்ணாமலையைச் சீண்டும் வானதி சீனிவாசன்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 23, 2026
in அரசியல் செய்திகள்
0
'எஸ்ஐஆர் பாஜக-விற்கு சாதகமானது என்றால், தவெக எப்படி ஆட்சிக்கு வந்தது?' – வானதி சீனிவாசன் கேள்வி
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பா.ஜ.க முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில், “பா.ஜ.க-வால் அடையாளம் பெற்று வெளியேறியவர்கள், பா.ஜ.க-விலிருந்து மட்டும் வெளியேறவில்லை. பா.ஜ.க தொண்டர்களுக்கு உயிர்மூச்சான தேசியம், இந்துத்துவத்தில் இருந்தும் வெளியேறி விட்டார்கள் என்பதை, ஒவ்வொரு நாளும் நிரூபித்து வருகிறார்கள்.

யார் கொள்கை வழி நிற்பவர்கள் என்பதை இப்போது, தேசியவாதிகள் புரிந்து கொண்டிருப்பார்கள். கரப்பான் பூச்சியை ஆதரிப்பவர்கள் நிச்சயம் தேச விரோதிகள்தான், இந்தியாவைச் சீர்குலைக்க நினைக்கும் அன்னிய நாடுகளின் சதித் திட்டத்திற்கு உடன்படுபவர்கள்தான் அதில் எந்தச் சந்தேகமும் இல்லை” என மறைமுகமாக அண்ணாமலையை விமர்சித்து இருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் மறைமுகமாக அண்ணாமலையை விமர்சிக்கும் வகையில் தனது எக்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், “நாங்கள் தேசியத்திற்கு அத்தாரிட்டி என்று ஒவ்வொரு கட்சியும் சொல்ல வேண்டும் என்பதே பா.ஜ.க-வின் விருப்பம். முன்பெல்லாம், காங்கிரஸ், இடதுசாரிகள், தி.மு.க, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள், ’தேசியத்திற்கு பா.ஜ.க மட்டும்தான் அத்தாரிட்டியா, பா.ஜ.க-வை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேச விரோதியா?’ என்று பா.ஜ.க-வினரை நோக்கி கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அதே கேள்வியை, இப்போது, பா.ஜ.க-வால் அரசியல் அடையாளம் பெற்று, வெளியேறியவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

பா.ஜ.க ஒருபோதும், ‘தேசியத்திற்கு, இந்துத்துவத்திற்கு அத்தாரிட்டி’ என்று சொன்னதில்லை. சொல்லப் போவதும் இல்லை. ஆனால், ‘தேசியத்திற்கு, இந்துத்துவத்திற்கு பா.ஜ.கதான் அத்தாரிட்டி’ என்பது, தேச விரோதிகளுக்குத் தெரிந்திருக்கிறது. இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனும், ‘நான் தேசியவாதி’ என்றும், இந்தியாவில் செயல்படும் கட்சிகள், அமைப்புகள் அனைத்தும், ‘நாங்கள் தேசியவாதி’ என்றும் உணர வேண்டும்.

‘தேசியத்துக்கு நாங்கள்தான் அத்தாரிட்டி’ என்று ஒவ்வொரு கட்சியும் சொல்ல வேண்டும் என்பதுதான் பா.ஜ.கவின் விருப்பம். 1980ம் ஆண்டில் மும்பையில் நடந்த பா.ஜ.க தொடக்க விழாவில் பேசிய அடல் பிகாரி வாஜ்பாய், ‘Nation First; Party Next; Self Last’ என்பதுதான் பா.ஜ.க-வின் கொள்கை என்று பிரகடனம் செய்தார். ஒவ்வொரு பா.ஜ.க தொண்டரின் உயிர்மூச்சும் இதுதான். பா.ஜ.க-வினருக்கு எல்லாவற்றையும் விட தேசம்தான் முக்கியம்” எனத் தெரிவித்துள்ளார்.

‘நான் தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்ட பாஜக-வின் ‘துரந்தரா’?’ – விமர்சனங்களுக்கு அண்ணாமலை விளக்கம்



.

Previous Post

தீபாவளி வரை கரப்பான் பூச்சி போராட்டம் நடத்ததாது! – அபிஜித் தீப்கே திடீர் அறிவிப்பின் பின்னணி என்ன? | India News (இந்தியா செய்திகள்)

Next Post

50% ஊழியர்களுக்கு work from home  கட்டாயம் – வெளியான ஹேப்பி நியூஸ்! என்ன காரணம் தெரியுமா? | இந்தியா போட்டோகேலரி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
50% ஊழியர்களுக்கு work from home  கட்டாயம் – வெளியான ஹேப்பி நியூஸ்! என்ன காரணம் தெரியுமா? | இந்தியா போட்டோகேலரி

50% ஊழியர்களுக்கு work from home  கட்டாயம் – வெளியான ஹேப்பி நியூஸ்! என்ன காரணம் தெரியுமா? | இந்தியா போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In