Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“8 ஆண்டுகள் உழைத்த பணத்தை முதலீடாக வைத்துதான் அரசியலில் இறங்கினேன்" – அமைச்சர் கீர்த்தனா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 23, 2026
in அரசியல் செய்திகள்
0
“8 ஆண்டுகள் உழைத்த பணத்தை முதலீடாக வைத்துதான் அரசியலில் இறங்கினேன்" – அமைச்சர் கீர்த்தனா
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


விருதுநகர் க்ஷத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளியில், அப்பள்ளியின் முன்னாள் மாணவியும், தொழில்துறை அமைச்சருமான கீர்த்தனாவுக்குப் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது.

அதில் பங்கேற்று மாணவிகளுக்கு மத்தியில் உரையாற்றிய அமைச்சர் கீர்த்தனா, “நமக்கு கிடைக்கும் சிறிய வாய்ப்புகளைக் கூட என்றுமே நாம் கைவிட்டுவிடக் கூடாது. அந்த வாய்ப்புகள் பிற்காலத்தில் எந்த அளவிற்கு நமது வாழ்க்கைக்கு உதவப் போகின்றன என்பதை நம்மால் கணிக்க முடியாது.

படிப்பது, பட்டம் பெறுவது அதற்குப் பிறகு திருமணம் செய்தவது என இந்தச் சட்டகத்திற்குள்ளேயே நம் வாழ்க்கை முடிந்துவிடக் கூடாது. பெண்கள் இந்தச் சுழற்சியை உடைத்து வெளியே வர வேண்டும்.

அமைச்சர் கீர்த்தனா
அமைச்சர் கீர்த்தனா

நானும் இதே சுழற்சியில்தான் சிக்கியிருந்தேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே எனக்குத் திருமணப் பேச்சுகள் தொடங்கின. என்னை பெண் பார்க்கவும் வந்தார்கள். ஆனால், நான் அவர்கள் முன்னாடியே `நான் லண்டன் சென்று படிக்கப் போகிறேன்’ என்று துணிச்சலாகக் கூறினேன்.

ஆரம்பத்தில் எனது தந்தை இதற்குப் பெரிய தடையாக இருந்தார். நான் எனது தந்தையை நம்பிக்கையோடு அணுகி, சமூகத்தில் நிச்சயம் முன்னேறிக் காட்டுவேன் என்று தைரியம் அளித்தேன்.

அன்று எனக்குத் தடையாக இருந்த அதே அப்பாதான், பிற்காலத்தில் நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று சொன்னபோது எனக்கு ஆதரவாக நின்று போஸ்டர் ஒட்டும் அளவிற்குப் பக்கபலமாக மாறினார். படிப்பை முடித்தவுடன் ரூ.9,600 மட்டுமே சம்பளம் தரக்கூடிய ‘சமூக சேவை’ (Social Service) பணியைத் தேர்வு செய்து, மகாராஷ்டிரா மாநிலத்தின் ஏழைப் பகுதியிலிருந்த அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் சமூக சேவையைத் தேர்ந்தெடுத்தேன்.

அப்போதுதான் எனக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. அரசியலைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்வதற்காக அரசியல் ஆலோசகராக மாறினேன்.

அமைச்சர் கீர்த்தனா
அமைச்சர் கீர்த்தனா

நமது முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வீரப்பெண்மணி மமதா பானர்ஜி என மூன்று வெவ்வேறு மாநில முதலமைச்சர்களிடம் சுமார் 8 ஆண்டுகள் அரசியல் ஆலோசகராகப் பணியாற்றினேன். இந்த அனுபவம்தான் `நம்மாலும் அரசியலில் சாதிக்க முடியும்’ என்ற பெரும் தைரியத்தை எனக்குள் விதைத்தது. 8 ஆண்டுகள் உழைத்துச் சேர்த்த பணத்தைச் முதலீடாக வைத்து, வேலையைத் துறந்து அரசியலில் களம் இறங்கினேன்” என்றார்.

“ஒன்றிய அரசின் உத்தரவுக்கு முதல்வர் விஜய் அடிபணிந்துள்ளது, மிகப்பெரிய தலைகுனிவு” – சீமான்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

“எங்கள் நம்பிக்கையின் கலங்கரை விளக்கம் நீங்கள்” – பிரதமர் மோடியை குறிப்பிட்டு போலந்து பிரதமர் உரை! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

தீபாவளி வரை கரப்பான் பூச்சி போராட்டம் நடத்ததாது! – அபிஜித் தீப்கே திடீர் அறிவிப்பின் பின்னணி என்ன? | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தீபாவளி வரை கரப்பான் பூச்சி போராட்டம் நடத்ததாது! – அபிஜித் தீப்கே திடீர் அறிவிப்பின் பின்னணி என்ன? | India News (இந்தியா செய்திகள்)

தீபாவளி வரை கரப்பான் பூச்சி போராட்டம் நடத்ததாது! – அபிஜித் தீப்கே திடீர் அறிவிப்பின் பின்னணி என்ன? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In