Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

News 18 Exclusive : ஈரானுடன் ஒப்பந்தம் செய்வது மிக கடினம்… அமெரிக்க வெளியுறவு அமைச்சர் நியூஸ் 18-க்கு பிரத்யேக பேட்டி | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 23, 2026
in அரசியல் செய்திகள்
0
News 18 Exclusive : ஈரானுடன் ஒப்பந்தம் செய்வது மிக கடினம்… அமெரிக்க வெளியுறவு அமைச்சர் நியூஸ் 18-க்கு பிரத்யேக பேட்டி | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 20, 2026 9:24 PM IST

ஈரான் நாட்டு அதிகாரிகள் தங்களுக்குக் கிடைக்கும் வளங்களை நாட்டின் வளர்ச்சிக்காகவோ அல்லது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவோ பயன்படுத்தவில்லை

ராகுல் ஜோஷி - மார்கோ ரூபியோ
ராகுல் ஜோஷி – மார்கோ ரூபியோ

ஈரானை பயங்கரவாத ஷியா மதகுருமார்கள் கட்டுப்படுத்துவதாகவும், அத்தகைய ஆட்சியாளர்களுடன் எந்தவிதமான ஒப்பந்தங்களை மேற்கொள்வது மிகவும் கடினமான காரியம் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

நெட்வொர்க்18 குழுமத்தின் தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு வழங்கிய பிரத்யேகப் பேட்டியில் அவர் இதனைக் குறிப்பிட்டார். ஈரான் நாட்டு அதிகாரிகள் தங்களுக்குக் கிடைக்கும் வளங்களை நாட்டின் வளர்ச்சிக்காகவோ அல்லது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவோ பயன்படுத்தவில்லை என்றும், இதனால் டெஹ்ரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார அழுத்தங்களை விதித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் மீது ஈரான் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருவதாக மார்க்கோ ரூபியோ கண்டனம் தெரிவித்தார்.

போரில் எந்தவிதத் தொடர்பும் இல்லாத அப்பாவி வணிகக் கப்பல்களையும், மாலுமிகளையும் குறிவைத்துத் தாக்குவது இரண்டாம் உலகப் போர் கால நாஜிக்களின் நீர்மூழ்கிக் கப்பல் உத்திகளைப் போன்றது என்று அவர் குறிப்பிட்டார். இப்பகுதியில் அமெரிக்கா தொடர்ந்து வர்த்தகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பளித்து வருவதாகவும், ஈரான் ஏவுகிற பெரும்பாலான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

வணிகக் கப்பல்களில் பணியாற்றும் மாலுமிகளிடையே அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் உள்ளதைக் சுட்டிக்காட்டிய மார்க்கோ ரூபியோ, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணம் செய்யும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது என்றார்.

சில சமயங்களில் வான்வழித் தாக்குதல்களில் என்ஜின் அறை பாதிக்கப்படுவதோடு, ஏராளமான இந்திய மாலுமிகளும் தங்கள் இன்னுிரை இழந்துள்ளனர் என்று அவர் வருத்தம் தெரிவித்தார். ஈரான் தனது இதுபோன்ற தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மார்க்கோ ரூபியோ வலியுறுத்தினார்.



.

Previous Post

காணாமல் போன சிறுமி; “டம்மி ஆட்சியில் பச்சை குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை”- உதயநிதி கண்டனம் | dmk udhayanidhi slams vijays tvk government

Next Post

கார்த்திகா கைது விவகாரம்: “வேலை செய்கின்ற இடத்தால் விளைந்த நோய்”- வன்னி அரசுக்கு ராசா பதில்| a. raja slams vanni arasu ntk karthika arrest

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கார்த்திகா கைது விவகாரம்: “வேலை செய்கின்ற இடத்தால் விளைந்த நோய்”- வன்னி அரசுக்கு ராசா பதில்| a. raja slams vanni arasu ntk karthika arrest

கார்த்திகா கைது விவகாரம்: "வேலை செய்கின்ற இடத்தால் விளைந்த நோய்"- வன்னி அரசுக்கு ராசா பதில்| a. raja slams vanni arasu ntk karthika arrest

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In