Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கடல்வழி வர்த்தகம் 80-100% அளவுக்கு மீட்பு.. News 18-க்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிரத்யேக தகவல் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 23, 2026
in அரசியல் செய்திகள்
0
கடல்வழி வர்த்தகம் 80-100% அளவுக்கு மீட்பு.. News 18-க்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிரத்யேக தகவல் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 20, 2026 9:42 PM IST

வர்த்தகக் கப்பல்களில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அமெரிக்கா உறுதியாக உள்ளதாகவும் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.

மார்கோ ரூபியோ
மார்கோ ரூபியோ

உலகளாவிய கடல் வர்த்தகம் கடும் பாதிப்புக்குள்ளான நிலையில் கடல்வழி வர்த்தகம் 80 முதல் 100 சதவீதம் அளவுக்கு மீட்கப்பட்டுள்ளதாக நியூஸ் 18 க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

நெட்வொர்க்18 நிர்வாக இயக்குநர் ராகுல் ஜோஷிக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் அவர் இதனைக் குறிப்பிட்டார். கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது ஈரானின் பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க – இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் உலகளாவிய எண்ணெய் நெருக்கடியும் எரிபொருள் விலை உயர்வும் ஏற்பட்டது.

தற்போது அமெரிக்காவின் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக இப்பகுதியில் வர்த்தகக் கப்பல்களின் போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. எனினும், அமெரிக்கா தனது ராணுவ அழுத்தத்தைக் கைவிடாவிட்டால் சாதாரண கப்பல் போக்குவரத்தைத் தொடர முடியாது என்று ஈரான் நிபந்தனை விதித்துள்ளதுடன், ஒரு வாரத்திற்குள் ஜலசந்தியைத் திறக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ நியூஸ் 18க்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவது மிகவும் கடினமான காரியம் என்று குறிப்பிட்ட மார்க்கோ ரூபியோ, போருடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாத அப்பாவி மாலுமிகள் மீதும் வணிகக் கப்பல்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருவதைக் கடுமையாகக் கண்டித்தார்.

இரண்டாம் உலகப் போர் கால நாஜிகளின் நீர்மூழ்கிக் கப்பல் உத்திகளை ஈரான் பின்பற்றுவதாகக் கூறிய அவர், இதை உலக நாடுகள் ஒன்றிணைந்து கண்டிக்க வேண்டும் என்றார். அமெரிக்க ராணுவம் இப்பகுதியில் தொடர்ந்து வர்த்தகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பளித்து வருவதாகவும், ஈரான் ஏவும் பெரும்பாலான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இப்பகுதியில் நடக்கும் தாக்குதல்களில் பல இந்திய மாலுமிகள் தங்கள் உயிரை இழந்துள்ளதாகத் தெரிவித்த மார்க்கோ ரூபியோ, இதுகுறித்து அமெரிக்கா மிகுந்த கவலை கொண்டுள்ளது என்றார். வர்த்தகக் கப்பல்களில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாகவும், ஈரான் தனது இத்தகைய தாக்குதல் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.



.

Previous Post

பிரியங்கா மகனின் புகைப்படக் காட்சி; 75 படங்கள் அகற்றம்; `இது ஆட்சியின் பிழை…' – காங்கிரஸ் கண்டனம்!

Next Post

காணாமல் போன சிறுமி; “டம்மி ஆட்சியில் பச்சை குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை”- உதயநிதி கண்டனம் | dmk udhayanidhi slams vijays tvk government

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மின்வெட்டு: “ப்யூஸ் போன த.வெ.க. அரசு.! – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்| Power Cut: Fuse Blown TVK Government’ Udhayanidhi Stalin Criticizes

காணாமல் போன சிறுமி; "டம்மி ஆட்சியில் பச்சை குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை"- உதயநிதி கண்டனம் | dmk udhayanidhi slams vijays tvk government

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In