Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஹார்முஸ் நீரிணை பகுதியில் வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதலை ஈரான் நிறுத்த வேண்டும்: மார்கோ ரூபியோ! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 22, 2026
in அரசியல் செய்திகள்
0
ஹார்முஸ் நீரிணை பகுதியில் வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதலை ஈரான் நிறுத்த வேண்டும்: மார்கோ ரூபியோ! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 21, 2026 10:06 AM IST

ஹார்முஸ் நீரிணை பகுதியில் பயணிக்கும் வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டிய பொறுப்பு ஈரானுக்கு உள்ளது என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியா தெரிவித்துள்ளார்.

மார்கோ ரூபியா
மார்கோ ரூபியா

ஹார்முஸ் நீரிணை பகுதியில் பயணிக்கும் வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டிய பொறுப்பு ஈரானுக்கு உள்ளது என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நியூஸ் 18 குழும ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணலில், “ஹார்மூஸ் நீரிணை பகுதியில் பயணிக்கும் வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டிய பொறுப்பு ஈரானுக்கு உண்டு என நினைக்கிறேன். அந்த வழியாக பயணிக்கும் பயணிகள் கப்பல் மற்றும் இந்த போருக்கு தொடர்பு இல்லாத மாலுமிகள் மீது தாக்குதல் நடத்துவது சரியல்ல. இது குறித்து நாங்கள் கவலையடைகிறோம். எனவே இதனை நிறுத்தும் பொறுப்பு ஈரானுக்கு இருப்பதாக நினைக்கிறேன். அதே சமயம், நாங்கள் அவர்கள் மீது கடுமையான பொருளாதார அழுத்தத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அதற்கு காரணம், அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு டாலரையும், தங்களிடம் இருக்கும் வளங்களையும் நாட்டுக்காகவோ, மக்களுக்காகவோ பயன்படுத்துவதில்லை. அவர்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறார்கள். ஏவுகணைகளையும், ட்ரோன்களையும், வணிக கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்துகிறார்கள்.

இரண்டாம் உலக போரின்போது, நாஜி படையினர் நீர் மூழ்கி கப்பல்களை பயன்படுத்தினர். அப்படியான ஒரு தந்திரத்தை தான் ஈரான் பயன்படுத்துகிறது. ஆகவே வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதலை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும். வர்த்தகக் கப்பல்களைக் குறிவைப்பதாகவும், போருடன் எந்தத் தொடர்பும் இல்லாத மாலுமிகளைக் கொல்ல முயற்சிப்பதாகவும் வெளிப்படையாகவே கூறும் ஒரு தேச அரசு நம்மிடம் உள்ளது. இரண்டாம் உலக போருக்கு பின் நீங்கள் அப்படியான ஒரு விஷயத்தை பார்த்திருக்க முடியாது. அதனால் தான் சொல்கிறோம் இது நாஜி டெக்னிக். இதற்கு உலக நாடுகள் ஒன்று திரண்டு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

இந்த போருக்கு முன்பு இருந்த நிலையை போல, ஹார்முஸ் நீரிணை பகுதிகளில் பயணிக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்களின் எண்ணிக்கை அதே அளவில் தொடர்வதை நாங்கள் உறுதி செய்து வருகிறோம். ஒவ்வொரு இரவும், கப்பல் போக்குவரத்துக்கு பாதுகாப்பாக அமெரிக்க செயல்பட்டு வருகிறது. வணிக கப்பல்கள் மீதான தாக்குதலை முறியடித்து வருகிறோம். பெரும்பாலான கப்பல்கள் அந்த வழியில் பயணித்து வருகிறது. அதே சமயம், சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. பெரும்பாலும் இந்திய மாலுமிகள் இந்த பயணத்தில் இருப்பதால் அவர்களில் பலர் உயிரிழந்துள்ளனர்.” என்றார்.



.

Previous Post

நவம்பர் 3-க்குப் பிறகு அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரமடையுமா?|After November 3, Will US-Iran Tensions Escalate?

Next Post

விழுப்புரம்: செஞ்சி சிறுமி மாயமான விவகாரத்தில் பின்தங்கிய காவல்துறை; களமிறங்கிய சிபிசிஐடி போலீஸார்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விழுப்புரம்: செஞ்சி சிறுமி மாயமான விவகாரத்தில் பின்தங்கிய காவல்துறை; களமிறங்கிய சிபிசிஐடி போலீஸார்!

விழுப்புரம்: செஞ்சி சிறுமி மாயமான விவகாரத்தில் பின்தங்கிய காவல்துறை; களமிறங்கிய சிபிசிஐடி போலீஸார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In