Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

காவலர் நினைவு தினம்: உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு அமித் ஷா மரியாதை! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 21, 2026
in அரசியல் செய்திகள்
0
“நக்ஸலை ஒழித்தது போல்… 2029க்குள் போதைப் பொருள் இல்லா இந்தியாவை உருவாக்குவோம்” – அமைச்சர் அமித்ஷா | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 21, 2026 7:57 PM IST

டெல்லியில் காவலர் நினைவு தினத்தையொட்டி அமித் ஷா அஞ்சலி செலுத்தினார். 2026 மார்ச் மாதத்திற்குள் நாடு நக்சல் அச்சுறுத்தலில் இருந்து முழுமையாக விடுபடும் என்று அவர் தெரிவித்தார்.

அமித் ஷா (கோப்பு படம்)
அமித் ஷா (கோப்பு படம்)

காவலர் நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் பணியின்போது உயிர் தியாகம் செய்த காவல் துறையினருக்கு மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா மரியாதை செலுத்தினார். அப்போது, போதைப் பொருளுக்கு எதிராகப் போராடுதல் என்ற செய்தியை வலியுறுத்தி நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரு சக்கர வாகனப் பேரணியை தொடங்கி வைத்தார்.

அப்போது உரையாற்றிய அமித் ஷா, சுதந்திரம் பெற்றது முதல் தற்போது வரை நாட்டிற்கான சேவையில் ஈடுபட்டு தங்களுடைய உயிரைத் தியாகம் செய்த துணிச்சல்மிக்கக் காவல் துறையினருக்கு மரியாதை செலுத்த அனைவரும் கூடியுள்ளோம் என்று தெரிவித்தார்.

சுதந்திரம் பெற்று சுமார் எட்டு தசாப்தங்களுக்குப் பிறகு இந்தியா தற்போது உலகின் கௌரவமிக்க, மரியாதைக்குரிய இடத்தில் இருப்பதாகக் கூறினார். இச்சாதனைக்கான அடித்தளம் நமது வீரர்களின் தியாகங்களில் உள்ளதாக தெரிவித்தார். நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பைப் பராமரிக்கவும், எல்லைகளை காக்கவும் அந்த வீரர்கள் தங்களுடைய உயிரை தியாகம் செய்திருக்காவிட்டால் தற்போது நாம் எந்த இடத்தில் இருப்போம் என்பதை யாராலும் கற்பனைக் கூட செய்ய முடியாது என்று அவர் கூறினார்.

இந்திய காவல் துறையினருக்கு 2026-ம் ஆண்டு மிகச் சிறப்பான ஆண்டு என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். பல தசாப்தங்களாக இந்தியாவில் இருந்த நக்சல் செயல்பாடுகளிலிருந்து 2026 மார்ச் 31 அன்று நாடு விடுபட்டதாக அவர் கூறினார். நக்சல் நடவடிக்கையால் 1981-ம் ஆண்டு முதல் 2026 மார்ச் மாதம் வரை நாடு பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டதாக அவர் கூறினார். இக்காலகட்டத்தில், பல துணிச்சல்மிக்க பாதுகாப்பு படையினரும், அப்பாவி குடிமக்களும் தங்களுடைய உயிரை இழந்ததாக தெரிவித்தார். 3,600-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் உயிர் தியாகம் செய்ததாகவும், சுமார் 13,700 அப்பாவி குடிமக்கள் உயிர் இழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.



.

Previous Post

புதுச்சேரி கைலாசா ஆசிரமத்தில் பாஜக உள்துறை அமைச்சர் – வீடியோ மூலம் நித்தியானந்தா வரவேற்ற பின்னணி!

Next Post

“இடைத்தேர்தலில் சி.விஜயபாஸ்கர் போட்டியிடுவார்..!" – அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த அப்டேட்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“இடைத்தேர்தலில் சி.விஜயபாஸ்கர் போட்டியிடுவார்..!" – அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த அப்டேட்

``இடைத்தேர்தலில் சி.விஜயபாஸ்கர் போட்டியிடுவார்..!" - அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த அப்டேட்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In