Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நூடுல்ஸ் இல்லை, டீ இல்லை.. 5 பேர் உயிரிழந்த சம்பவத்தில் வெளியான உண்மை.. நொய்டாவை உலுக்கிய சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 21, 2026
in அரசியல் செய்திகள்
0
நூடுல்ஸ் இல்லை, டீ இல்லை.. 5 பேர் உயிரிழந்த சம்பவத்தில் வெளியான உண்மை.. நொய்டாவை உலுக்கிய சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 21, 2026 3:04 PM IST

Greater Noida Family Death News | கிரேட்டர் நொய்டாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறை ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது. காவல்துறையின் கூற்றுப்படி, இந்த மரணங்கள் உணவு நஞ்சானதால் ஏற்படவில்லை, அதேபோல் இவை கொலையும் அல்ல. அப்படியானால், இந்த ஐந்து பேரும் எப்படி உயிரிழந்தனர் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

நொய்டா குடும்பம்
நொய்டா குடும்பம்

உத்தரப் பிரதேசத்தின் கௌதம் புத்த நகர் மாவட்டத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில், ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் உடற்கூராய்வில் உறுதியான காரணங்கள் எதுவும் கண்டறியப்படாததால், அவர்களின் உடல் உறுப்பு மாதிரிகள் (viscera samples) மேலதிக பரிசோதனைக்காகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த மரணங்கள் குறித்து காவல்துறை ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. குடும்பத்தினர் உணவு நஞ்சானதால் (தேநீர் அல்லது நூடுல்ஸ் போன்றவற்றை உட்கொண்டதால்) உயிரிழக்கவில்லை, அதே நேரத்தில் அவர்கள் கொலை செய்யப்படவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவத்தில், உயிரிழந்தவரின் இரு சகோதரிகள் மற்றும் ஒரு மைத்துனரை காவல்துறை கைது செய்துள்ளனர். ஆரம்பத்தில் இது உணவு நஞ்சானதால் நிகழ்ந்த மரணம் என்று கருதப்பட்டாலும், உயிரிழந்த நபரின் கைபேசியில் கண்டெடுக்கப்பட்ட ஆடியோ பதிவு, துன்புறுத்தல் காரணமாகவே குடும்பத்தினர் தற்கொலை செய்துகொண்டதை உறுதிப்படுத்தியது. மகேஷ் என்பவரின் கைபேசியில் இருந்த அந்தப் பதிவில், தனது மூத்த சகோதரி சுனிதா, மைத்துனர் சேகர் மற்றும் இளைய சகோதரி சப்னா ஆகியோர் தங்கள் குடும்பத்தின் மரணத்திற்கு காரணமானவர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அந்த மூன்று பேரையும் காவல்துறை கைது செய்தது. விசாரணையில், உயிரிழந்த மகேஷின் சகோதரி சுனிதா, தங்கள் தாயின் மீது செல்வாக்கு செலுத்தி, மகேஷும் அவரது குடும்பத்தினரும் வசித்து வந்த வீட்டைத் தனது பெயருக்கு மாற்றிக்கொண்டது தெரியவந்தது. வீட்டை இழந்ததால், மகேஷ் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார். இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் விவரம்: 

1. மகேஷ் (குடும்பத்தலைவர்), வயது சுமார் 37.

2. லலிதா (மகேஷின் மனைவி), வயது சுமார் 35.

3. லட்டு (என்கிற சக்‌ஷத்) (மகேஷின் மகன்), வயது சுமார் 11.

4. மிஸ்டி (மகேஷின் மகள்), வயது சுமார் 7.

5. ரியான்ஸ் (மகேஷின் மகன்), வயது சுமார் 3.

அக்டோபர் 16-ம் தேதி இரவு என்ன நடந்தது?

முதற்கட்ட தகவல்களின்படி, அக்டோபர் 16, 2026 அன்று இரவு, சம்பந்தப்பட்ட அனைவரும் வெளியில் இருந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். உணவு உண்ட பிறகு அவர்கள் உறங்கச் சென்றனர்; மறுநாள் காலை அவர்கள் இறந்து கிடந்ததைக் கண்டறிந்தனர். தடய அறிவியல் ஆய்வக (FSL) குழுவினரும், உணவுப் பாதுகாப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, தேவையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. சட்டப்பூர்வ விசாரணை நடைமுறைகளுக்குப் (பஞ்சநாமா) பிறகு, ஐந்து பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மருத்துவர்கள் குழுவினர் பிரேதப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்; இந்த முழு நிகழ்வும் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டது. ஐந்து பேரின் உடல்களிலிருந்தும் உள் உறுப்புகளின் மாதிரிகளை (viscera) மருத்துவர்கள் சேகரித்து வைத்துள்ளனர்; அவை தற்போது பகுப்பாய்வுக்காகத் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.



.

Previous Post

“10 நாள்களாக கண்டுபிடிக்க முடியாத சிறுமி; காவல்துறை செயலிழந்து வருகிறதா?" – டிடிவி தினகரன் காட்டம்

Next Post

`காவல்துறையின் அன்றாட சில்லறை செலவின நிதி உயர்த்தி அறிவிப்பு!’ – தமிழ்நாடு அரசு The Tamil Nadu government has allocated Rs 71 crore for the police department’s petty expenses.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`காவல்துறையின் அன்றாட சில்லறை செலவின நிதி உயர்த்தி அறிவிப்பு!’ – தமிழ்நாடு அரசு The Tamil Nadu government has allocated Rs 71 crore for the police department’s petty expenses.

`காவல்துறையின் அன்றாட சில்லறை செலவின நிதி உயர்த்தி அறிவிப்பு!' - தமிழ்நாடு அரசு The Tamil Nadu government has allocated Rs 71 crore for the police department's petty expenses.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In