Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘அந்தரங்க வீடியோக்கள்.. விடிய விடிய காதல் பேச்சு..’ இன்ஸ்டாகிராமில் வந்த இளம்பெண்.. விசாரணையில் அதிர்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 20, 2026
in அரசியல் செய்திகள்
0
‘அந்தரங்க வீடியோக்கள்.. விடிய விடிய காதல் பேச்சு..’ இன்ஸ்டாகிராமில் வந்த இளம்பெண்.. விசாரணையில் அதிர்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மென்பொருள் நிறுவனங்களில் வேலை பார்த்தவர் கே.பவன் குமார். 23 வயதான இவர், அங்கு வேலை செய்துவிட்டு பின்னர் ஹைதராபாத்தின் கூக்கட்பள்ளி பகுதியில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. வேலைக்குச் சென்ற இடங்களில் தொடர்ந்து பணியாற்றாமல், சமூக வலைதளங்களில் அதிக நேரத்தைச் செலவிட்டு வந்த பவன்குமார், அதன் மூலம் பணம் சம்பாதிக்க வழி தேடியதாகத் தெரிகிறது. அப்போதுதான், தனது உண்மையான அடையாளத்தை மறைத்து ஒரு இளம்பெண்ணாக நடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

கொல்கத்தாவைச் சேர்ந்த சமூக வலைதள இன்ப்ளூயன்சர் ஒருவரின் புகைப்படத்தைத் தனது புகைப்படமாகப் பயன்படுத்திய பவன் குமார், இன்ஸ்டாகிராமில் 13 கணக்குகளையும் ஃபேஸ்புக்கில் 14 கணக்குகளையும் உருவாக்கியிருக்கிறார். இந்தக் கணக்குகளில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு, பெண்களின் பெயரிலும் புகைப்படங்களிலும் தன்னை ஓர் இளம்பெண்ணாக அறிமுகப்படுத்திக்கொண்டார். புகைப்படத்தைப் பார்த்து நட்பாகப் பேசத் தொடங்கியவர்களை அப்படியே விட்டுவிடவில்லை பவன் குமார். ஒவ்வொருவரிடமும் தேனொழுக பேசி அவர்களின் நம்பிக்கையைப் பெறத் தொடங்கினார்.

இதையும் படிங்க: 16 வயது சிறுமியை ஒரே நாளில் 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் : கேரளாவில் அதிர்ச்சி

பவன் குமாரின் பதிவுகளுக்குக் கருத்துத் தெரிவிக்கும் ஆண்களிடம் முதலில் சாதாரணமாகப் பேசுவார். பின்னர் நட்பாகப் பழகி, தனிப்பட்ட உரையாடலுக்கு அழைத்துச் செல்வார். நாளடைவில் அந்த உரையாடல்களை காதல் மற்றும் நெருக்கமான உறவு குறித்த பேச்சுகளாக படிபடியாக மாற்றுவார் ஒருபுறம், தன்னைப் பிடித்திருந்தால் திருமணம் செய்துகொள்ளலாம் என ஆசை வார்த்தை காட்டியுள்ளார். மறுபுறம், திருமணம் வரை செல்ல வேண்டியதில்லை, விருப்பப்பட்டால் நெருக்கமாகவும் பழகலாம் எனப் பேசி வலை விரித்துள்ளார்.

இப்படிப் பேசிபேசி, எதிரில் இருப்பவர்களின் நம்பிக்கையையும் ஆசையையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார். தாங்கள் ஓர் இளம்பெண்ணுடன் தான் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று நம்பிய பலரும், அவரிடம் தொடர்ந்து உரையாடியதாகக் கூறப்படுகிறது. இந்தப் பட்டியலில் தொழிலதிபர்கள், வியாபாரிகள், மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர்.  தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்த மோசடி வலையில் சிக்கியிருக்கின்றனர்.

நட்பு வளர்ந்ததும் பணம் கேட்பது அடுத்த கட்டமாக மாறியது. பெரிய தொகையை ஒரே நேரத்தில் கேட்பதற்குப் பதிலாக, சின்னச் சின்னத் தேவைகளைச் சொல்லிப் பணம் வாங்கியிருக்கிறார். பிறந்தநாளுக்கு பரிசு வாங்க வேண்டும், நண்பர்களுடன் பார்ட்டிக்குச் செல்ல வேண்டும், துணி வாங்கப் பணம் போதவில்லை எனப் பல்வேறு காரணங்களைக் கூறிப் பணம் கேட்டுள்ளார் பெண் வேடத்தில் வலம் வந்த பவன் குமார்.  காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ளலாம் என்றும் நம்பியவர்கள், அவர் கேட்ட பணத்தை வாரி வழங்கியிருக்கின்றனர். இப்படிப் பலரிடமிருந்து சிறிய தொகைகளாகப் பணம் பெற்றுக்கொண்டே வந்தவர், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் மொத்தம் 26 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் அடுத்தடுத்து மாயமாகும் சிறுமிகள்.. செஞ்சியை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூரிலும் அதிர்ச்சி!

ஆனால், பணத்தைப் பறிப்பதோடு இந்த மோசடி நின்றுவிடவில்லை. தனிப்பட்ட உரையாடல்களில் எதிரில் இருப்பவர்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி, அவர்களிடம் இருந்து அந்தரங்கப் புகைப்படங்களையும் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஒரு சிலரிடம் நிர்வாணப் புகைப்படங்களையும் பெற்றதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, அதுவே அவர்களை மிரட்டுவதற்கான ஆயுதமாக மாறியது. பின்னர் அந்தப் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி, அவர்களிடம் இருந்து பணத்தை பறித்திருக்கிறார் பவன் குமார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுடைய தனிப்பட்ட விவரங்களும் அந்தரங்கப் புகைப்படங்களும் வெளியே தெரிந்துவிடுமோ? என்ற அச்சத்தில் புகார் அளிக்கத் தயங்கியிருக்கின்றனர்.

குறிப்பாக, இந்த மோசடியில் பணத்தை இழந்த சில அதிகாரிகளும், தொழிலதிபர்களும் தங்களது அடையாளங்களை வெளிப்படுத்த வேண்டாம் என்று போலீசாரிடம் கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோசடி குறித்த புகார்கள் குவிந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிலர் அளித்த புகார்களின் அடிப்படையில், ஹைதராபாத் கூக்கட்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, பவன் குமாரை அடையாளம் கண்டு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடமிருந்து மூன்று செல்போன்கள், ஒரு மடிக்கணினி மற்றும் மூன்று சிம் கார்டுகளைப் பறிமுதல் செய்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அந்தரங்கப் புகைப்படங்கள் மூலம் மிரட்டப்பட்டதாகக் கூறப்படும் நபர்கள் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.



.

Previous Post

செவிலியர் மரணம், சிறுமி மாயம்: விஜய்க்கு கனிமொழி கேள்வி|Nurse Found Dead, Girl Missing: Kanimozhi Questions Vijay

Next Post

“தன்னந்தனி ஆளாகிட்டோம்னு எங்களை ஏளனமா பாக்குறாங்க”- தவெகவில் ரசிகர்கள் குமுறல்; கவனிப்பாரா முதல்வர்? | TVK fans express their grievances; will the leader take note?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“தன்னந்தனி ஆளாகிட்டோம்னு எங்களை ஏளனமா பாக்குறாங்க”- தவெகவில் ரசிகர்கள் குமுறல்; கவனிப்பாரா முதல்வர்? | TVK fans express their grievances; will the leader take note?

"தன்னந்தனி ஆளாகிட்டோம்னு எங்களை ஏளனமா பாக்குறாங்க"- தவெகவில் ரசிகர்கள் குமுறல்; கவனிப்பாரா முதல்வர்? | TVK fans express their grievances; will the leader take note?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In