Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

'இது' நடந்தால் மக்கள் தொகை கணக்கெடுப்பில் அரசியல் தலையீடு ஏற்படும்! – மார்க்சிஸ்ட் கம்யூ. எதிர்ப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 20, 2026
in அரசியல் செய்திகள்
0
'இது' நடந்தால் மக்கள் தொகை கணக்கெடுப்பில் அரசியல் தலையீடு ஏற்படும்! – மார்க்சிஸ்ட் கம்யூ. எதிர்ப்பு
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கான பணிகள் நடந்து வருகின்றன.

கடந்த 16-ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகளுக்கு

> அரசு, உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவிபெறும் அல்லது உதவிபெறாத தனியார் நிறுவனங்கள், சங்கங்கள் அல்லது அறக்கட்டளைகளின் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்கள்,

மக்கள்தொகை கணக்கெடுப்பு
மக்கள்தொகை கணக்கெடுப்பு
Gold: பண்டிகை சீசன் நெருங்குது! தங்க முதலீட்டிற்கு செபி போடும் பிரேக்; எந்த SIPகளுக்குத் தடை?

> மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி அமைப்பு அல்லது பிற நிறுவனங்களில் (பொதுத்துறை நிறுவனங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள், வங்கிகள், நிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகள் உட்பட) பணிபுரியும் எழுத்தர்கள் அல்லது ஏதேனும் அதிகாரிகள்,

> மாநில அரசோ அல்லது யூனியன் பிரதேச நிர்வாகமோ தகுதியானவர் என்று கருதும் நபரும்

பங்கேற்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விதிகள், 1990-ஐ திருத்தி வெளியிடப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு (திருத்த) விதிகள், 2026 ஆகும்.

இந்தத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார்…

இந்தத் திருத்தத்தில் என்ன பிரச்னை?

‘கணக்கெடுப்பு (திருத்த) விதிகள், 2026’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள திருத்தங்கள், கணக்கெடுப்பாளர்களாக நியமிக்கப்படக்கூடிய நபர்களின் வரம்பைப் பெருமளவில் விரிவுபடுத்துகின்றன.

இது நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அளவுகோல்கள், நியமிக்கப்படுபவர்களின் நடுநிலைமை மற்றும் அரசியல் தலையீடுகளுக்கு எதிரான பாதுகாப்பு அம்சங்கள் குறித்துக் கேள்விகளை எழுப்புகிறது.

தெளிவாக வரையறுக்கப்பட்ட அளவுகோல்களோ அல்லது வெளிப்படையான பாதுகாப்பு நடைமுறைகளோ இல்லாமல்,

மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள இந்தத் தன்னிச்சையான அதிகாரம்,

சுயநல நோக்கத்தோடும் அரசியல் காரணங்களோடும் நியமனங்கள் செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்பை உருவாக்குகிறது.

மத்திய அரசு திருத்திய சட்டம்
மத்திய அரசு திருத்திய சட்டம்

மக்கள் தயங்குவார்கள்…

கணக்கெடுப்பு என்பது ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் தனிநபரிடமிருந்தும் விரிவான தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பதாகும்.

நம்பிக்கை இல்லாத நபர்களிடம் இத்தகைய தகவல்களைப் பகிர்ந்துகொள்ள மக்கள் தயங்குவார்கள்.

தற்போதைய அரசியல் சூழலில், தாங்கள் அளிக்கும் தகவல்கள் தங்களை அரசியல் ரீதியாகக் கணிப்பதற்கும், குறிப்பிட்ட சமூகங்களைக் குறிவைப்பதற்கும், அவர்களின் குடியுரிமையைக் கேள்விக்குள்ளாக்குவதற்கும்

அல்லது அவர்களின் நியாயமான உரிமைகள் மற்றும் சலுகைகளிலிருந்து அவர்களை விலக்கி வைப்பதற்கும் பயன்படுத்தப்படும் என்ற பயம் மிகவும் நியாயமானதே.

குறிப்பாக ஆளும் தரப்போடு அரசியல் தொடர்பைக் கொண்ட தனியார் நபர்களை நியமிப்பது, இந்த முழுப் பணியின் நம்பகத்தன்மையையுமே குலைத்துவிடும்.

தனிப்பட்ட தகவல்கள்…

2027-ஆம் ஆண்டின் இரண்டாம் கட்டக் கணக்கெடுப்பிற்காக அறிவிக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தில் பெற்றோரின் மதம், வங்கிக் கணக்கு விவரங்கள்,

ஆதார் மற்றும் பிற அடையாள அட்டைகள், பாஸ்போர்ட் மற்றும் அலைபேசி எண் உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.

இது கவலையை மேலும் பெரிதாக்குகிறது. இதுபோன்ற தனிப்பட்ட விவரங்களைச் சேகரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது இந்திய மக்களுக்குச் சொந்தமான ஒரு தேசியப் பணியாகும்.

CPI(M) General Secretary M A Baby has written a letter to the Hon’ble President of India, seeking intervention for the withdrawal of the amendments to the Census rules. https://t.co/SNlPAd9ii2

— CPI (M) (@cpimspeak) October 20, 2026

ஆளும் கட்சியின் அல்லது அதன் கருத்தியல் சார்ந்த அமைப்புகளின் அரசியல் நலன்களுக்குச் சேவை செய்யும் ஒரு கருவியாக மாற அதை அனுமதிக்க முடியாது.

எனவே, இந்தச் சூழ்நிலையில், இந்தியக் குடியரசின் அரசியலமைப்புத் தலைவரான நீங்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, இத்திருத்தங்களை வாபஸ் பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும்,

அரசியலமைப்புச் சட்டத்தின் கொள்கைகளுக்கும் பொதுமக்களின் நம்பிக்கைக்கும் உகந்த முறையில் இக்கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.



.

Previous Post

ராம்லீலா நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் அமித்ஷா.! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

News 18 Exclusive : அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ சிறப்பு பேட்டி.. இன்றிரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
News 18 Exclusive : அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ சிறப்பு பேட்டி.. இன்றிரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது | India News (இந்தியா செய்திகள்)

News 18 Exclusive : அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ சிறப்பு பேட்டி.. இன்றிரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In