Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Delhi Red Fort Blast | “மனித உடல் பாகங்கள் சிதறிக் கிடந்தன” – சம்பவ இடத்தில் இருந்தவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 21, 2025
in அரசியல் செய்திகள்
0
Delhi Red Fort Blast | டெல்லி செங்கோட்டை கார் வெடி விபத்து தீவிரவாத தாக்குதல்! – நியூஸ்18 குழுமத்திற்கு கிடைத்த தகவல்  | இந்தியா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:November 10, 2025 8:14 PM IST

Delhi Red Fort அருகே மெட்ரோ கார் பார்க்கிங்கில் இரண்டு கார்கள் வெடித்து 9 பேர் பலி, 13 வாகனங்கள் சேதம், விசாரணை நடந்து வருகிறது.

News18
News18

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் கேட் 1 பகுதியில் உள்ள கார் பார்க்கிங்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் இன்று மாலை சுமார் 6 மணி அளவில் வெடித்துச் சிதறியது. இரண்டு கார்கள் வெடித்ததைத் தொடர்ந்து, அங்கிருந்த 13 வாகனங்கள் வரை சேதமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வெடி விபத்தில் இதுவரை 9 பேர் வரை பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை இந்த வெடிவிபத்து திட்டமிட்ட சதியா அல்லது விபத்தா என்பது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. அதேசமயம், ஹரியானா மாநிலத்தில் பயங்கர வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், ஏழு பேர் வரை கைது செய்யப்பட்டிருப்பதும் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது.

இந்நிலையில், டெல்லி செங்கோட்டை அருகே நடந்த வெடி விபத்தை நேரில் பார்த்த மற்றும் அந்தப் பகுதிக்கு அருகே இருந்தவர்கள் இது குறித்து விவரித்துள்ளனர். அதன்படி அந்த இடத்தில் இருக்கும் ஒருவர் பேசும்போது, “நாங்கள் இங்கு வந்து பார்த்தபோது மனித உடலின் பாகங்கள் சிதறிக் கிடந்தன. சில வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன” எனத் தெரிவித்தார்.

அதேபோல், மற்றொருவர், “இதுபோன்ற வெடி சத்தத்தை என் வாழ்நாளில் இதுவரை நான் கேட்டதே இல்லை. மூன்று முறை வெடி சத்தம் கேட்டதை நான் உணர்ந்தேன். அந்த சமயத்தில் நாங்கள் அனைவரும் மரணிக்க போகிறோம் என்றே நினைத்தேன்” எனத் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த இடத்தின் அருகே வீட்டில் இருந்த ஒரு முதியவர் பேசும்போது, “தீ எரிவதை என் வீட்டில் இருந்து பார்த்தேன். அதன் பிறகு உடனடியாக கீழே வந்து என்ன நடக்கிறது என பார்க்க வந்தேன். பெரும் சத்தத்துடன் வெடித்தது” எனத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து பேசிய டெல்லி காவல்துறை அதிகாரிகள் “தற்போதைக்கு என்னால் எதுவும் சொல்ல முடியாது. விசாரணை நடந்துவருகிறது” எனத் தெரிவித்தனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 10, 2025 8:10 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Delhi Red Fort Blast | “மனித உடல் பாகங்கள் சிதறிக் கிடந்தன” – சம்பவ இடத்தில் இருந்தவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்



.

Previous Post

இனாம் நிலம் விவகாரம்; தீக்குளிக்க முயன்ற மக்கள்…போராட்டத்தில் குதித்த அரசியல்வாதிகள் கைது – karur people protest!

Next Post

மசோதா மீது நடவடிக்கை எடுக்க காலக்கெடு; ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள்; பதிலளித்த உச்ச நீதிமன்றம் | Deadline to take action on the bill; 14 questions raised by the President; Supreme Court responds

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மசோதா மீது நடவடிக்கை எடுக்க காலக்கெடு; ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள்; பதிலளித்த உச்ச நீதிமன்றம் | Deadline to take action on the bill; 14 questions raised by the President; Supreme Court responds

மசோதா மீது நடவடிக்கை எடுக்க காலக்கெடு; ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள்; பதிலளித்த உச்ச நீதிமன்றம் | Deadline to take action on the bill; 14 questions raised by the President; Supreme Court responds

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In