ஆசிய சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்தியா, கொரியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் சீனா ஆகிய அணிகள் ஆகஸ்ட் 3 முதல் 12 வரை சென்னையில் இந்த சாம்பியன் போட்டியில் கலந்து கொள்கின்றன.
இந்த விளையாட்டுகள் நடக்கும் புல்தரை ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது. நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட ஹாக்கி ஜீரோ டர்ஃப் (புல்தரை)80 சதவீத கரும்பைக் கொண்டு தயாரிக்கப்பட்டு பசுமை ஆற்றலைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தரைக்கு குறைந்த தண்ணீர் தேவைப்படுவதால், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொலிகிராஸ் பாரிஸ் ஜிடி ஜீரோ ஹாக்கி டர்ப் ( ஹாக்கி புல்தரை) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை, சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் திறந்து வைத்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் நடைபெற்ற FIH ஒடிசா ஆண்கள் உலகக் கோப்பை 2023 போது இந்த புல்வெளி வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது. 2024 பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் FIH ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2026 க்கும் இதே புல்வெளி பயன்படுத்தப்படும்.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி சென்னை 2023க்கான பாக்ஸ் ஆபிஸ் டிக்கெட் விற்பனை சனிக்கிழமை (ஜூலை 29) தொடங்கியது. கலைஞர் நூற்றாண்டு விழா பந்தல் நிலை 1, கிழக்கு அரங்குகள் மற்றும் மைதானத்தின் தெற்கு அரங்குகளுக்கான டிக்கெட்டுகளை வாங்கலாம்.
டிக்கெட் விவரங்கள் கீழே..

டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெற : https://in.ticketgenie.in/Tickets/Hero-Asian-Champions-Trophy-2023
இப்போட்டிகளில் பங்கேற்க மலேசியா அணி முதலில் சென்னை வந்து இறங்கியுள்ளது. அவர்களை தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் வரவேற்றது.



