Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

டெல்லி செங்கோட்டை தற்கொலைப்படை தாக்குதல்… பலி எண்ணிக்கை உயர்வு | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 17, 2025
in அரசியல் செய்திகள்
0
Red Fort | டெல்லி செங்கோட்டை கார் வெடிகுண்டு தாக்குதல்… திட்டமிட்டது அல்ல பயத்தால் நடந்தது – ஏ.என்.ஐ. தகவல்   | இந்தியா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:November 17, 2025 6:43 PM IST

டெல்லி செங்கோட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

News18
News18

டெல்லி, செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் கேட் 1 அருகே கடந்த 10ஆம் தேதி மாலை 6.50 மணிக்கு கார் வெடிகுண்டு வெடிக்கவைக்கப்பட்டு, பெரும் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில், 13 பேர் பரிதாபமாக பலியான நிலையில் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தற்போது பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த வெடிகுண்டு தாக்குதல் தொடர்பான வழக்கை என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில், மருத்துவர்கள் முஸாமில், அதீல், ஷாஹீன், மொஹியுதின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகின்றனர். தொடர் விசாரணையில் டெல்லி செங்கோட்டை அருகே காரை கொண்டுவந்து வெடிக்க வைத்து, அதில் உயிரிழந்த உமர் நபிக்கு காரை வாங்கிக் கொடுத்த அமிர் ரஷித் அலி என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

அமிர் ரஷித் அலி கைதைத் தொடர்ந்து செங்கோட்டை கார் வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக செய்தி அறிக்கை வெளியிட்ட என்.ஐ.ஏ. அமைப்பு, டெல்லி செங்கோட்டை கார் வெடிகுண்டு தாக்குதல் தற்கொலைப்படை தாக்குதல். இதில், காரில் வந்து வெடிகுண்டை வெடிக்கவைத்தது உமர் உன் நபிக்கு கார் வாங்கிக் கொடுத்தது காஷ்மீரைச் சேர்ந்த அமிர் ரஷித் அலி. இந்த அமிர் ரஷித் அலி, காஷ்மீரில் இருந்து டெல்லி வந்து உமர் உன் நபிக்கு கார் வாங்கிக் கொடுத்துள்ளார். விசாரணையின் அடிப்படையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து இந்த வெடிகுண்டு தாக்குதல் தொடர்பான விசாரணையையும், கைது நடவடிக்கையையும் என்.ஐ.ஏ. மேற்கொண்டுவரும் சூழலில், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் தற்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக டெல்லி செங்கோட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 13ல் இருந்து 15ஆக உயர்ந்துள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 17, 2025 6:43 PM IST



.

Previous Post

பிரேமலதாவுடன் ஆர்.பி.உதயகுமார் சந்திப்பு; கூட்டணி குறித்துப் பேசப்பட்டதா?

Next Post

Sanitary Workers : ‘செத்தா கூட பரவால்ல…’ – உண்ணாவிரதமிருக்கும் தூய்மைப் பணியாளர்கள்! |“Sanitation Workers on Hunger Strike: ‘We Don’t Care Even If We Die’ – What’s Behind the Protest?”

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Sanitary Workers : ‘செத்தா கூட பரவால்ல…’ – உண்ணாவிரதமிருக்கும் தூய்மைப் பணியாளர்கள்! |“Sanitation Workers on Hunger Strike: ‘We Don’t Care Even If We Die’ – What’s Behind the Protest?”

Sanitary Workers : 'செத்தா கூட பரவால்ல...' - உண்ணாவிரதமிருக்கும் தூய்மைப் பணியாளர்கள்! |“Sanitation Workers on Hunger Strike: ‘We Don’t Care Even If We Die’ – What’s Behind the Protest?”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In