Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

துணை வேந்தர்கள் நியமன வழக்கு… உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 17, 2025
in அரசியல் செய்திகள்
0
இலவசங்கள் கொடுக்க பணம் இருக்கு, ஊதியம் கொடுக்க பணம் இல்லையா? தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:November 17, 2025 9:07 AM IST

துணை வேந்தர் நியமன வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை, தமிழ்நாடு அரசு, ஆளுநர், பல்கலைக்கழக மானியக்குழு உள்ளிட்டோர் தொடர்பாக முக்கிய நடவடிக்கை.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

துணை வேந்தர்கள் நியமன வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான வேந்தர்களை ஆளுநருக்குப் பதில், முதலமைச்சரே நியமிக்க வகைசெய்யும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க காலதாமதம் செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல் செய்தது.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க மூன்று மாதம் கால நிர்ணயம் செய்து உத்தரவிட்டது. மேலும் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்த 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே தனது தனி அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து, துணைவேந்தர் நியமனம் தொடர்பான சட்டத்தை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டது. இது பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு எதிராக இருப்பதாக வெங்கடாசலபதி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு, தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு தடைவிதித்தது.

தங்களின் வாதத்தை முழுமையாக கேட்காமல் சட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டதாகக் கூறி, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதுகுறித்து மத்திய அரசு, ஆளுநர், பல்கலைக்கழக மானியக்குழு உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி சூரியகாந்த் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 17, 2025 9:07 AM IST



.

Previous Post

அட்டைப்படம்

Next Post

DMDK:“இதுதான் கேப்டனுக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்” – விஜயகாந்த் குறித்து பிரேமலதா!| DMDK: “One piece is enough, People will be scared” – Premalatha on Vijayakanth!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
DMDK:“இதுதான் கேப்டனுக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்” – விஜயகாந்த் குறித்து பிரேமலதா!| DMDK: “One piece is enough, People will be scared” – Premalatha on Vijayakanth!

DMDK:``இதுதான் கேப்டனுக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்" - விஜயகாந்த் குறித்து பிரேமலதா!| DMDK: ``One piece is enough, People will be scared'' - Premalatha on Vijayakanth!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In