நேற்று (நவ.15) நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜன் சுராஜ் கட்சியின் தேசியத் தலைவர் உதய் சிங், “இந்த தேர்தல் முடிவுகள் மிகுந்த சிரத்தை எடுத்து பெறப்பட்டுள்ளன. ஜூன் 21 முதல் வாக்குப்பதிவு நாள் வரை, இதற்காக கிட்டத்தட்ட ரூ.40,000 கோடி செலவிடப்பட்டது. அடிப்படையில் அரசாங்கத்தின் பணத்தை கொடுத்து மக்களின் வாக்குகளை வாங்கியுள்ளனர். உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட நிதிகள் இந்த பணப் பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் எனக்கு தெரிய வந்துள்ளது.” எனப் பேசியுள்ளார்.

ஜன் சுராஜ் செய்தித் தொடர்பாளர் பவன் வர்மா, மாநில கருவூலம் இப்போது தீர்ந்துபோயுள்ளதாகக் கூறியுள்ளார். பீகாரின் பொருளாதாரம் இந்த அளவு பெரிய தொகையை மீட்டெடுக்கும் நிலையில் இல்லை என்றும், இனி நலத்திட்டங்களுக்காக பயன்படுத்த நிதி இல்லை என்றும், கூறியுள்ளார்.
அவர், “எங்களிடம் உள்ள தகவல் தவறாகவும் இருக்கலாம், மாநிலத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ.10,000, உலக வங்கியிலிருந்து வேறு சில திட்டங்களுக்காக வந்த ரூ.21,000 கோடியிலிருந்து வழங்கப்பட்டிருக்கிறது தேர்தலுக்கான ஒழுக்க நெறிகள் செயல்பாட்டுக்கு வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, ரூ.14,000 கோடி எடுக்கப்பட்டு, மாநிலத்தில் உள்ள 1.25 கோடி பெண்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.” எனக் குற்றம்சாட்டியுள்ளார்
பீகார் மாநில அரசு தற்போது ரூ.4.06 லட்சம் கடனில் இருப்பதாகவும் தினசரி ரூ.63 கோடி வட்டி சுமை உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார் வர்மா
