
இது குறித்து நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன் குமார் கூறுகையில், “காமராஜர் படம் வைக்காததால் தான் நாங்கள் அந்த ஆர்ப்பாட்டத்தை புறக்கணித்தோம். காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் திங்கள்கிழமை எஸ்.ஐ.ஆரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்” என்றார்.
இது குறித்து தி.மு.க தரப்பில் விசாரித்தோம். “எஸ்.ஐ.ஆர்-க்கு எதிரான போராட்டத்துக்கு தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான பேனர்தான் அச்சடிக்கப்பட்டுள்ளது” எனச் சுருக்கமாகத் தெரிவித்தனர்.
