அரசு நிலமாக இருந்தால் அதனை விற்பனை செய்ய முடியாது. அப்படி இருக்கும் போது எப்படி அந்த நிலம் பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து விசாரணை கமிட்டி விசாரிக்க வேண்டும். கடந்த 35 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில் நான் விதிகளை மீறியதில்லை. நீர்ப்பாசன ஊழல் விவகாரத்தில் என் மீது நியாயமற்ற வகையில் குற்றம் சாட்டப்பட்டது” என்று தெரிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் செய்தது யாராக இருந்தாலும் அவர்களை விடமாட்டோம். விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அது தனது அறிக்கையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்யும். அதன் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை அஜித் பவாரும் ஏற்றுக்கொள்வார் என்று தெரிவித்துள்ளார். போலீஸார் இந்த நிலமோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில் அஜித் பவார் மகன் பெயர் இடம் பெறவில்லை. ஆனால் அஜித் பவார் மகன் பார்த் பவாரின் பார்ட்னர் திக்விஜய் பாட்டீல் பெயர் இடம் பெற்று இருக்கிறது.
திக்விஜய் பாட்டீலுக்கு சர்ச்சைக்குறிய நிலத்தை வாங்கிய கம்பெனியில் ஒரு சதவீதம் தான் பங்கு இருக்கிறது. ஆனால் அவரது பெயர்தான் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்று இருக்கிறது. இது குறித்து சிவசேனா(உத்தவ்) நிர்வாகி அம்பாதாஸ் தன்வே கூறுகையில்,”நிலத்தை வாங்கிய கம்பெனியில் அஜித் பவார் மகனுக்கு 99 சதவீத பங்கு இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஒரு சதவீத பங்கு இருப்பவர் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு விளக்கமளித்து மாநில வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே கூறுகையில்,”பத்திர பதிவில் கையெழுத்திட்டவர்கள் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது”என்று தெரிவித்தார்.
