மற்றொரு பதிவில், “சட்ட விரோத குவாரிகளுக்கு எதிரான அறப்போர் தொடரும். திருநெல்வேலியில் சட்டவிரோத திருட்டு கல் குவாரிகளால் மக்கள் எப்படி பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஆவணப்படுத்தும் நிகழ்வு இன்று நடந்தது.
இதில் கலாட்டா செய்ய வேண்டும் என்பதற்காகவே திருட்டு குவாரி ரவுடிகள் சிலர் வந்து தகராறு செய்தார்கள். நாற்காலிகளை தூக்கி எறிந்து கலாட்டா செய்தார்கள்.
ஆனால் எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் உருட்டல்கள் வந்தாலும் அறப்போர் தொடரும். இது போன்ற தடைகள் நம் வேலைகளை ஒருபொழுதும் நிறுத்தாது.
இன்னும் வேகமாக செயல்பட்டு சட்டவிரோத திருட்டு கல் குவாரி ஊழல்களை வெளிக்கொண்டு வருவோம். மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை வெளிக்கொண்டு வருவோம்.
இது போன்ற சட்ட விரோத திருட்டு குவாரிகளை ஆதரிப்பதை திமுக அரசு எப்பொழுது நிறுத்தப் போகிறது? திருட்டு குவாரிகளின் திருட்டை எப்பொழுது தடுக்க போகிறது?
திருட்டு குவாரி முதலாளிகளை விட மக்கள் நலன் முக்கியம் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் எப்பொழுது உணர போகிறார்?” என்று குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பு: சட்ட விரோதமாக திருட்டு குவாரி நடத்தி இயற்கை வளங்களை திருடுபவர்கள் திருடர்கள் தான்.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
