மேம்படுத்தப்பட்ட வெடிமருந்துகள் உள்ளிட்டவற்றில் நாங்கள் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டதால் வெற்றி பெற்றோம். எனவே, இளம் தலைமுறையான உங்கள் அறிவும், உங்கள் பங்கேற்பும் எங்களுக்குத் தேவை.
உதாரணமாக, பாகிஸ்தானின் போலி செய்திகள் மற்றும் வதந்திகள் பரவிக்கொண்டிருந்தபோது, செகந்திராபாத்தைச் சேர்ந்த ஒருவர் எங்களைத் தொடர்புகொண்டு,‘சார், எனக்கு ட்விட்டரில் 3 லட்சம் பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள்.

என்ன செய்தியை சொல்ல வேண்டும் என்று சொல்லுங்கள் – அவர்களின் போலி செய்திகளை நாம் அம்பலப்படுத்துவோம்” என்றார். நாடு முழுவதிலுமிருந்து இதுபோன்ற பல ஆதரவுகள் எங்களுக்கு வந்தன.
தேசபக்தியால் சிலர், ‘எங்களை இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்றனர். நம் கலாச்சாரம் ஆழமானவை. யார் இங்கு வந்தாலும் அவர்களை ஆழமாக உள்வாங்குவோம்.
இஸ்லாம், கிறிஸ்தவம் அல்லது வெளிநாட்டிலிருந்து வேறு எந்த நம்பிக்கையையும் கொண்டு வந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் எங்களுடன் இணைந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இந்திய நாகரிகத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டனர்.
இந்தியாவும் நமது கலாச்சாரத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்ட நாடுதான். புத்த மதம் இந்தியாவிலிருந்து சீனா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா வரை பரவியது.
டிஜிட்டல் முறையிலும், தொழில்நுட்ப ரீதியாகவும் முன்னேறிய நம் இளைய தலைமுறை சமூக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இவ்வளவு சக்திவாய்ந்த இந்த தலைமுறை ஒழுக்கத்தையும் சரியான வழிகாட்டுதலையும் பெற்றால், இந்தியா ஒரு நொடியில் முன்னேற முடியும்.” என்றார்.
