முந்தைய அரசாங்கம் பெண்களுக்காக எந்த வேலையும் செய்யவில்லை. இப்போது பெண்களை மிகவும் வலிமையானவர்களாக நாங்கள் மாற்றியிருக்கிறோம்.
இனி அவர்கள் யாரையும் சார்ந்திருக்க மாட்டார்கள், தங்களின் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கான அனைத்து வேலைகளையும் அவர்களால் செய்ய முடியும்.
ஆரம்பத்திலிருந்தே சமூகத்தின் அனைத்து வகுப்பினரையும் வளர்ச்சியடையச் செய்திருக்கிறோம்.

நீங்கள் இந்துவாக இருந்தாலும் சரி, முஸ்லிமாக இருந்தாலும் சரி, உயர் சாதியாக இருந்தாலும் சரி, பிற்படுத்தப்பட்டவராக இருந்தாலும் சரி, தலித்தாக இருந்தாலும் சரி அனைவருக்காகவும் நாங்கள் உழைத்துள்ளோம்.
என் குடும்பத்துக்காக எதையும் செய்யவில்லை. இப்போது, ஒரு பீகாரியாக இருப்பது அவமானகரமான விஷயம் அல்ல, மரியாதைக்குரிய விஷயம்.
எங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். மேலும் அதிக வேலைகள் செய்யப்படும். அது பீகாரை மிகவும் மேலும் வளர்க்கும், சிறந்த மாநிலங்களில் சேர்க்கும்” என்று கோரிக்கை விடுத்தார்.
பீகாரில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் சேர்ந்து போட்டியிட்டு 7-வது முறையாக முதல்வரான நிதிஷ் குமார், கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க-வை கழற்றிவிட்டு ஆர்.ஜே.டி, காங்கிரஸுடன் கைகோர்த்து 8-வது முறையாக முதல்வராகப் பதவியேற்று பின்னர் அதே தேர்தலுக்கு முன்பாக அவர்களைக் கழற்றிவிட்டு மீண்டும் பா.ஜ.க-வுடன் சேர்ந்து 9-வது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
