Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஹரியானா: "சாதிய ஒடுக்குமுறையால் உயிரை மாய்த்துக்கொண்ட IPS அதிகாரி" – காங்கிரஸ் கண்டனம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 15, 2025
in அரசியல் செய்திகள்
0
ஹரியானா: "சாதிய ஒடுக்குமுறையால் உயிரை மாய்த்துக்கொண்ட IPS அதிகாரி" – காங்கிரஸ் கண்டனம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஹரியானாவில் கூடுதல் டி.ஜி.பியாக பணியாற்றி வந்த ஒய். பூரன் குமார் என்ற அதிகாரி தனது துப்பாக்கியாலேயே சுட்டுத் தற்கொலை செய்துள்ள சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் அவரைத் தொடர்ந்து சந்தீப் குமார் என்ற மற்றொரு அதிகாரியும் தற்கொலை செய்ததுடன், பூரன் குமார் ஒரு ஊழல் அதிகாரி என்று தற்கொலை கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Puran Kumar

இந்த சம்பவங்கள் காவல்துறையை உலுக்கியிருக்கும் சூழலில், பூரன் குமார் மரணத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை.

அவரது அறிக்கையில், “பா.ஜ.க. ஆட்சி செய்து வரும் ஹரியானா மாநிலத்தில், சாதிய அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கும், பணியிடத்தில் ஏற்படும் அவமதிப்பிற்கும் ஆளாகி மன உளைச்சலுடன் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ள இளம் ஐ.பி.எஸ் அதிகாரி திரு. பூரண் குமார் அவர்களின் துயரமான மரணம், நமது நாட்டில் ஜனநாயகமும் மனிதநேயமும் எவ்வளவு ஆழமான பாதிப்பில் இருக்கிறது என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது.

அவரை தற்கொலை செய்யும் அளவிற்கு தூண்டியவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை
காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை

ஒரு காவல்துறையில் உயர்ந்த இடத்தில் உள்ள ஒரு அதிகாரி கூட, சாதிய பாகுபாட்டினால் தன் உயிரை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது, ஹரியானா அரசின் தோல்வி மட்டுமல்ல, ஒட்டுமொத்த பா.ஜ.க. ஆட்சியின் முழுமையான தோல்வியாகும்.

இந்த அரசின் ஆட்சி இயந்திரம் முழுவதும் அநியாயம், ஒடுக்குமுறை, பாகுபாடு, வெறுப்பு ஆகியவற்றில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த துயர சம்பவம் நிரூபிக்கிறது.” எனக் கூறியுள்ளார்.

அத்துடன் காங்கிரஸ் தலைவர்களின் கண்டத்தையும் பதிவு செய்துள்ளார் செல்வப்பெருந்தகை.

அவரது அறிக்கையில், “இதுபோன்ற சாதி வெறி ஆட்சி நிலவுவதற்கு மௌனமாக இருக்க முடியாது எனக் கூறி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. மல்லிகார்ஜுனா கார்கே அவர்கள், ‘ஒரு அதிகாரி தன் கடமையின்போது சாதிய அவமதிப்பால் தற்கொலை செய்ய நேரிட்டது, ‘பாசிச ஆட்சியின் முகமூடி கிழிந்த தருணம் ‘ என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, சோனியா காந்தி

அதேபோல், திருமதி சோனியா காந்தி அவர்கள் தனது ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்தி, ‘இந்த நாட்டில் சாதிய அடிப்படையில் இன்னும் உயிர்கள் மாய்கின்றன என்ற உண்மை நம்மை வெட்கப்பட வைக்கிறது. இத்தகைய பாசிச சூழ்நிலைகள் முடிவடைய மக்கள் எழுந்து குரல் கொடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

திருமதி பிரியங்கா காந்தி அவர்களும் தமது அறிக்கையில், ‘ஒரு இளம் அதிகாரியின் உயிர் சாதிய வெறியின் பலியாக மாறியிருக்கிறது. இது அரசின் பொறுப்பின்மையின் விளைவு. அந்த அதிகாரி குடும்பத்துக்கு நீதியும் நியாயமும் கிடைக்க வேண்டும்’ எனக் கூறி, குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று, மக்கள் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் நேரடியாக ஹரியானா மாநிலத்துக்கு சென்று, தற்கொலை செய்துக் கொண்ட ஐபிஎஸ் அதிகாரி திரு. பூரண் குமார் அவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியிருப்பது, காங்கிரஸ் கட்சியின் மனிதநேயம், அன்பு, சமத்துவம் மற்றும் நீதி மீதான உறுதியான நம்பிக்கையின் எடுத்துக்காட்டாகும். அவர் குடும்பத்துக்கு நம்பிக்கையூட்டும் விதமாக, ‘இந்தியாவில் இனிமேல் எந்த ஒருவரும் சாதி அவமதிப்பால் உயிரிழக்கக் கூடாது’ என வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவம் ஹரியானா மட்டுமல்ல; இந்தியாவின் ஆன்மாவை உலுக்கும் ஒன்று. சாதி, மத, மொழி பாகுபாடு இல்லா சமத்துவ இந்தியாவுக்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் என்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் உறுதியாக தெரிவிக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

IndiGO: “பறக்கத் தகுதியில்லை; செருப்பு தைக்க போ…” – குற்றச்சாட்டுக்கு நிறுவனத்தின் பதில் என்ன?



.

Previous Post

“இது பிற்போக்குதனமான கருத்து” – அதிபர் ட்ரம்பை சாடும் சமூக ஊடகப் பயனர்கள்! – காரணம் என்ன? | “This is a reactionary comment” – Social media users slam President Trump! – What is the reason?

Next Post

“ஜெயலலிதா இருந்தால் இப்படி பேச முடியுமா?” – சி.வி.சண்முகத்துக்கு கீதா ஜீவன் கண்டனம்! | Minister Geetha Jeevan Condemns Ex-AIADMK Leader C.V. Shanmugam for Remarks Against Women

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“ஜெயலலிதா இருந்தால் இப்படி பேச முடியுமா?” – சி.வி.சண்முகத்துக்கு கீதா ஜீவன் கண்டனம்! | Minister Geetha Jeevan Condemns Ex-AIADMK Leader C.V. Shanmugam for Remarks Against Women

"ஜெயலலிதா இருந்தால் இப்படி பேச முடியுமா?" - சி.வி.சண்முகத்துக்கு கீதா ஜீவன் கண்டனம்! | Minister Geetha Jeevan Condemns Ex-AIADMK Leader C.V. Shanmugam for Remarks Against Women

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In