Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அமைதிக்கான நோபல் பரிசை டொனால்டு ட்ரம்பிற்கு அர்ப்பணித்த வெனிசுலா தலைவர்; ட்ரம்ப் சொல்வது என்ன? | Venezuelan leader dedicates Nobel Peace Prize to Donald Trump; what does Trump say?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 12, 2025
in அரசியல் செய்திகள்
0
அமைதிக்கான நோபல் பரிசை டொனால்டு ட்ரம்பிற்கு அர்ப்பணித்த வெனிசுலா தலைவர்; ட்ரம்ப் சொல்வது என்ன? | Venezuelan leader dedicates Nobel Peace Prize to Donald Trump; what does Trump say?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். உலகம் முழுக்க நடந்த அல்லது நடக்க இருந்த 7 போர்களை தான் தடுத்து நிறுத்தியதாகவும், அதற்காக எனக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று வெளிப்படையாக டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்படுவதற்குச் சில நாள்களுக்கு முன்பு காஸாவில் இஸ்ரேல் நடத்தி வந்த கொடூரமான தாக்குதலை நிறுத்தி விட்டதாக அறிவித்தார்.

இரண்டு ஆண்டுகளாக காஸாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தார்மீக ஆதரவு கொடுத்துவிட்டு இப்போது அதே அமெரிக்கா, இஸ்ரேலிடம் போரை நிறுத்துங்கள் என்று சொல்லி இருக்கிறது.

இஸ்ரேலும் போரை நிறுத்துவதாக அறிவித்ததோடு, போரை நிறுத்தப் பாடுபட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் பரிந்துரைத்தார்.

இரண்டு பேரும் சேர்ந்து ஒரு நாட்டை மண்ணோடு மண்ணாக மாற்றிவிட்டு இப்போது அவர்களே போரை நிறுத்திவிட்டோம் என்று கூறி நோபல் பரிசு கொடுங்கள் என்று கேட்பதாக இஸ்லாமிய நாடுகள் குற்றம் சாட்டின. ஆனாலும் டொனால்டு ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கவில்லை.

அவருக்குப் பதில் வெனிசுலாவில் ஜனநாயகத்திற்காகப் பாடுபட்ட அந்நாட்டு பெண் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவிற்கு இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசைப் பெற்ற பிறகு மரியா கொரினா மச்சாடோ தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், “‘இந்த பரிசைப் பாதிக்கப்பட்ட எனது நாட்டு மக்களுக்கும், எங்களது நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கும் அர்ப்பணிக்கிறேன். இன்று நாங்கள் வெற்றியின் வாசலில் இருக்கிறோம்.

எப்போதும் விட அதிகமான சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் அடைய ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்க மக்கள், லத்தீன் அமெரிக்க மக்கள் மற்றும் உலக ஜனநாயக நாடுகள் எங்களுக்கு முக்கிய உறுதுணையாக இருப்பார்கள் என்று நம்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.



.

Previous Post

EPS: “மாலை நேரப் பிரசங்கத்தில் கருத்துக்களைத் திரித்தி பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்” – தங்கம் தென்னரசு | Announcement to remove caste names Thangam Thennarasu criticize eps

Next Post

விசிக கார் தகராறு விபத்து: “திருமாவின் சந்தேகம் நியாயமானது; பா. ரஞ்சித்தின் அக்கறை உண்மையானது” – கமல் | Thiruma’s suspicion is justified. Pa. Ranjith’s concern is genuine – Kamal’s support

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விசிக கார் தகராறு விபத்து: “திருமாவின் சந்தேகம் நியாயமானது; பா. ரஞ்சித்தின் அக்கறை உண்மையானது” – கமல் | Thiruma’s suspicion is justified. Pa. Ranjith’s concern is genuine – Kamal’s support

விசிக கார் தகராறு விபத்து: "திருமாவின் சந்தேகம் நியாயமானது; பா. ரஞ்சித்தின் அக்கறை உண்மையானது" - கமல் | Thiruma's suspicion is justified. Pa. Ranjith's concern is genuine - Kamal's support

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In