Last Updated:
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் கிஷோர், தன்னை கடவுள்தான் செய்ய வைத்தார் என தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற விவகாரத்தில், தன்னை கடவுள்தான் செய்ய வைத்தார் என வழக்கறிஞர் கிஷோர் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமையன்று உச்ச நீதிமன்றம் கூடிய போது, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நோக்கி வழக்கறிஞர் கிஷோர் காலணியை வீச முயன்றார். அப்போது காவலாளிகள் அவரை தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த கிஷோர், கஜூராஹோ கோயிலில் மீண்டும் விஷ்ணு சிலை வேண்டும் என்றால் கடவுளிடம் சென்று கேளுங்கள் என்று நீதிபதி கூறியது தன்னை காயப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
தனது செயலுக்கு மன்னிப்பு கேட்கப் போவதும் இல்லை, தான் வருத்தப்படவும் இல்லை என்றும் தன்னை கடவுள்தான் செய்ய வைத்தார் எனவும் வழக்கறிஞர் கிஷோர் தெரிவித்தார்.
October 07, 2025 8:58 PM IST
“கடவுள்தான் என்னை காலணி வீச வைத்தார்!” – தலைமை நீதிபதி கவாய் மீது தாக்குதல் நடத்திய வழக்கறிஞர் கிஷோர்

