ஆனால், இந்தியாவில் ஒற்றைப் பெற்றோராக இருப்பவர்கள் குழந்தை தத்தெடுப்பு விஷயத்தில் கணிசமான சவால்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக அவர்கள் திருமணமாகாதவர்களாக இருந்தால் கூடுதல் சிரமம் ஏற்படும். இந்தியாவில் தத்தெடுப்பு செயல்முறை சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 ஆல் நிர்வகிக்கப்படுகிறது. தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் மத்திய தத்தெடுப்பு ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும். இதன் அனுமதி இல்லாமல் தத்தெடுக்க முடியாது.
கேரிங்ஸ் போர்ட்டலில் பதிவு செய்தல், பல்வேறு ஆவணங்களை (வருமானச் சான்று, சுகாதார அறிக்கை மற்றும் காவல்துறை சரிபார்ப்பு உட்பட) சமர்ப்பித்தல் மற்றும் வீட்டு ஆய்வு, அதைத் தொடர்ந்து பதிவு செய்வதற்கு 6-8 நாட்கள் காத்திருப்பு காலம் ஆகியவை இந்தச் செயல்முறையில் அடங்கும்.
இந்தியாவில் தத்தெடுப்பு செயல்முறை சட்டரீதியாக சிக்கலானது மட்டுமல்லாமல் நிதிரீதியாகவும் சவாலானது. CARA நிர்ணயிக்கும் கட்டணங்களில் பதிவு மற்றும் வீட்டு ஆய்வு அறிக்கைக்கு ரூ.6,000, குழந்தை பராமரிப்பு கார்பஸ் கட்டணங்களுக்கு ரூ.50,000 மற்றும் சட்டக் கட்டணங்களுக்கு என ரூ.20,000 முதல் ரூ.50,000 வரையில் ஆகும். ஆக மொத்தம் இந்தியாவில் வசிக்கும் தம்பதிகள் அல்லது ஒற்றைப் பெற்றோருக்கு, குழந்தையை தத்தெடுக்க வேண்டுமென்றால் ரூ.2,00,000 முதல் ரூ.2.5 லட்சம் வரை செலவாகலாம். இதுவே வெளிநாட்டில் வசிக்கும் பெற்றோர் என்றால், ஏஜென்சி கட்டணம், சட்ட முறைகள் மற்றும் பயணச் செலவுகள் உட்பட ரூ.2.6 மில்லியன் முதல் ரூ.3.7 மில்லியன் வரை செலவாகும்.
குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்பும் திருமணம் செய்யாத ஆண்களுக்கான விதிகள் வெவ்வேறு நாடுகளில் வேறுபடுகின்றன. இந்தியாவில், திருமணம் ஆகாத ஆண்கள் தத்தெடுக்க அனுமதிக்கப்பட்டாலும், கடுமையான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அவர்கள் குறைந்தபட்சம் 25 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் என்பதோடு ஆண் குழந்தைகளை மட்டுமே தத்தெடுக்க முடியும்.
ஒற்றை பெற்றோருக்கான வயது வரம்புகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 4 வயது அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, பெற்றோர் 25 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 5 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளுக்கு, பெற்றோர் 25 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 9 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு, 25 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்களாக பெற்றோர் இருக்க வேண்டும். 55 வயதுக்கு மேற்பட்ட ஒற்றை பெற்றோர் தத்தெடுக்க அனுமதி இல்லை.
தத்தெடுக்க விரும்பும் திருமணமான தம்பதிகள் குறைந்தது இரண்டு வருட திருமண ஸ்திரத்தன்மையை நிரூபிக்க வேண்டும். அவர்களின் வயது வரம்பு இரு பெற்றோரின் கூட்டு வயதின் அடிப்படையில் அமைந்துள்ளது. இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு 85 வயது, நான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு 90 வயது, நான்கு முதல் எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு 100 வயது, எட்டு முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு 110 வயது என இருக்க வேண்டும்.
October 07, 2025 4:49 PM IST
