Last Updated:
ஆட்டோ ஓட்டுநர், பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர்
பள்ளிக் குழந்தைகள் ஆபத்தான முறையில் ஆட்டோவில் கொண்டு செல்லப்படும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் மனினகர் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் ஆட்டோ ரிக்ஷாவில் மிகவும் ஆபத்தான முறையில் பயணித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ஒரு சிறுவன் ஆட்டோவின் பின்புறத்தில் அமர்ந்திருப்பதும், அவரது உடல் கிட்டத்தட்ட முழுவதுமாக வாகனத்திற்கு வெளியே தொங்கிக் கொண்டிருப்பதும் காணப்படுகிறது. அவனைப் சிறிய மரத் தடுப்பு மட்டுமே கீழே விழாமல் பாதுகாக்கிறது.
இந்த வீடியோவை டாக்டர் ஹர்ஷ் ஜகேடியா என்பவர் அக்டோபர் 5 அன்று X (முன்னர் ட்விட்டர்) தளத்தில் பகிர்ந்து, “இது 2025 ஆகிவிட்டது, இன்னும் அகமதாபாத்தில் மாணவர்கள் இப்படித்தான் பள்ளிக்குச் செல்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ குறித்து அறிந்த அகமதாபாத் காவல்துறை, உடனடியாக நடவடிக்கை எடுக்கப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ளது.
October 06, 2025 9:56 PM IST

