Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Bihar Elections 2025 Date: பிகார் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு… 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 6, 2025
in அரசியல் செய்திகள்
0
Bihar Elections 2025 Date: பிகார் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு… 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 06, 2025 4:47 PM IST

பிகார் சட்டமன்ற தேர்தல் 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

News18News18
News18

பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி அரசின் பதவிக்காலம் அடுத்த மாதம் 22ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்து பிகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகளை அறிவித்துள்ளனர்.

அதன்படி, பிகார் மாநிலத்தில் உள்ள 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு 6.11.25 அன்றும், இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு 11.11.25 அன்றும் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

121 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் விவரம்:

வேட்புமனு தாக்கல்: 10.10.25

வேட்புமனு தாக்கல் இறுதி நாள்: 17.10.25

வேட்புமனு பரிசீலனை: 18.10.25

வேட்புமனு திரும்ப பெறுதல்: 20.10.25

வாக்குப் பதிவு நாள்: 6.11.25

122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் விவரம்:

வேட்புமனு தாக்கல்: 13.10.25

வேட்புமனு தாக்கல் இறுதி நாள்: 20.10.25

வேட்புமனு பரிசீலனை: 21.10.25

வேட்புமனு திரும்ப பெறுதல்: 23.10.25

வாக்குப் பதிவு நாள்: 11.11.25

இரண்டு கட்டங்களாக நடைபெறும் வாக்குப் பதிவுகளில் பதிவாகும் வாக்குகள் 14.11.25 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

முன்னதாக கடந்த வாரம் பிகார் மாநிலம் பாட்னாவிற்குச் சென்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வரும் 28 ஆம் தேதி சாத் பண்டிகை முடிந்ததும் ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்துமாறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 06, 2025 4:37 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Bihar Elections 2025 Date: பிகார் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு… 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது!



.

Previous Post

H-1B விசா கட்டணம் விரைவில் ரத்தாகிறதா? – அமெரிக்க குடிவரவு வழக்கறிஞர் விளக்கம்|US Immigration lawyer says ‘No President has authority’ – H1B visa issue

Next Post

நீதிபதி கவாய் மீது தாக்குதல் – மு.க.ஸ்டாலின் | Shoe Thrown at Chief Justice P.R. Gavai Sparks Outrage; CM Stalin Condemns Incident

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நீதிபதி கவாய் மீது தாக்குதல் – மு.க.ஸ்டாலின் | Shoe Thrown at Chief Justice P.R. Gavai Sparks Outrage; CM Stalin Condemns Incident

நீதிபதி கவாய் மீது தாக்குதல் - மு.க.ஸ்டாலின் | Shoe Thrown at Chief Justice P.R. Gavai Sparks Outrage; CM Stalin Condemns Incident

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In