Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தொடர் கனமழையால் டார்ஜிலிங்கில் நிலச்சரிவு.. தரைமட்டமான வீடுகள், சாலைகள்! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 6, 2025
in அரசியல் செய்திகள்
0
தொடர் கனமழையால் டார்ஜிலிங்கில் நிலச்சரிவு.. தரைமட்டமான வீடுகள், சாலைகள்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 06, 2025 8:17 AM IST

மேற்குவங்க டார்ஜிலிங் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை, நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக 20 பேர் உயிரிழந்தனர்.

நிலச்சரிவுநிலச்சரிவு
நிலச்சரிவு

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. வீடுகள் தரைமட்டமாகி, சாலைகள் சேதமடைந்து, தொலைதூர கிராமங்கள் பலவும் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலமான டார்ஜிலிங் மற்றும் கலிம்போங், கூச் பெஹார், ஜல்பைகுரி, அலிப் பூர்துவார் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்துவாங்கியது.

இதேபோல, மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள அண்டை நாடான பூட்டானிலும் தொடர் மழை பெய்துவருவதால், அங்குள்ள குறிச்சு மற்றும் தலா அணைகள் நிரம்பி வழிகின்றன. அங்கிருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்படுவதால், டீஸ்டா மற்றும் ஜல்தகா ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

துதியாவில் உள்ள பாலஸன் ஆற்றிலும் காட்டாற்று வெள்ளம் பாய்ந்ததில், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. கடும் வெள்ளத்தால் சிலிகுரி-டார்ஜிலிங் மாநில நெடுஞ்சாலையில் உள்ள இரும்பு பாலத்தின் தூண் சேதம் அடைந்ததால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

மேற்கு மிட்னாபூரில் உள்ள அணையில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால் வேறு வழியின்றி அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால், ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், கரையோரப் பகுதிகளையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனிடையே, மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டார்ஜிலிங் மாவட்டத்தில் நிலச்சரிவால் கட்டடம் இடிந்ததால், இடிபாடுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். மேற்குவங்க மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் உயிரிழப்புகளுக்கு இரங்கள் தெரிவித்துள்ளனர். மீட்பு நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 06, 2025 8:17 AM IST



.

Previous Post

‘என்ன நடந்தாலும், அமெரிக்கா உடன் இந்தியாவிற்கு புரிந்துணர்வு ஏற்படத் தான் போகிறது’ – ஜெய்சங்கர் | Jaishankar explains problem in talks between India and US

Next Post

Vaiko speech at Lydian Nadhaswaram's – Thirukural 1330 grand launch event | Vikatan

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Vaiko speech at Lydian Nadhaswaram's – Thirukural 1330 grand launch event | Vikatan

Vaiko speech at Lydian Nadhaswaram's - Thirukural 1330 grand launch event | Vikatan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In