மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளனர். இந்தத் தொடர் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.
இந்தத் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 15 பேர் கொண்ட இந்திய அணியும் நேற்று(செப்.26) அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் காயம் காரணமாக விலகியுள்ளார்.
இதனால், அவருக்குப் பதிலாக 22 வயதான ஜோஹன் லெய்ன் முதல் முறையாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு விளையாட அழைக்கப்பட்டுள்ளார்.
