“இது எங்கள் ஏரியாவில் வராது”
மழைநீர் கால்வாயைத் தனித்திருத்தம் செய்து மழைநீரை மட்டும் புழல் ஏரிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும். சாக்கடை நீர் கலக்காமல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.
உரிய அதிகாரிகள் இதனைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மழைநீர் கால்வாய்களை மறு பரிசோதனை செய்து குறைகள் இருந்தால் உடனே சரிசெய்ய வேண்டும்.
மேலும் பொதுமக்கள், பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம் மற்றும் கடைக்காரர்கள் இணைந்து, புழல் ஏரி மற்றும் அதன் சுற்றுப்புற நிலங்களின் பாதுகாப்புக்குப் பங்களிக்க வேண்டும்.

நாங்களும் இந்தப் பிரச்னை குறித்து உரிய அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம்.
முதலில் ரெட்ஹில்ஸ் நகராட்சியில் சென்று கேட்டபொழுது, அவர்கள் `இது எங்கள் ஏரியாவில் வராது, நீங்கள் சென்று புழல் நகராட்சியில் விசாரியுங்கள்” என்று கூறினார்கள்.
பின்பு புழல் நகராட்சி சென்று விசாரித்தபொழுது, `இது புழலில் தனி நகராட்சி, இது சென்னையின் கீழ் வரும்’ என்று கூறினார்கள்.
`சோழாவரம் எந்த நகராட்சியில் வரும் என்று எங்களுக்குத் தெரியாது’ என்று கூறிவிட்டார்கள். நாங்கள் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் எந்தவொரு சரியான பதிலும் கிடைக்கவில்லை.
“இது எங்கள் ஏரியாவில் வராது” என்று எல்லாரும் நிராகரித்துவிட்டார்கள்.
செங்குன்றத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் சோழாவரம் பகுதியில் இருக்கிற இந்த மழைநீர் கால்வாய் எந்தப் பகுதியின் கீழ் வருமோ, உரிய அதிகாரிகள் அதனைக் கவனத்தில் எடுத்துச் சரி செய்ய வேண்டியது அவசியம்.
மழைநீர் செல்லும் கால்வாயில் மழைநீரை மட்டுமே செல்ல அனுமதிக்க வேண்டும்.
