Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`விஜயனும் ஸ்டாலினும் நாஸ்திக் டிராமாச்சாரிகள்’ – சபரிமலை பாதுகாப்பு சங்கமத்தில் அண்ணாமலை பேச்சு! | Annamalai slams stalin and pinarayi vijayan in ketala

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 23, 2025
in அரசியல் செய்திகள்
0
`விஜயனும் ஸ்டாலினும் நாஸ்திக் டிராமாச்சாரிகள்’ – சபரிமலை பாதுகாப்பு சங்கமத்தில் அண்ணாமலை பேச்சு! | Annamalai slams stalin and pinarayi vijayan in ketala
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கேரள அரசின் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் பம்பாவில் கடந்த 20-ம் தேதி அகில உலக ஐயப்ப சங்கமம் மாநாடு நடத்தப்பட்டது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்த அந்த மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டர். அந்த மாநாட்டுக்கு எதிராக சபரிமலை கர்மசமிதி சார்பில் பந்தளத்தில் சபரிமலை பாதுகாப்பு சங்கமம் என்ற பெயரில் மாநாடு நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசுகையில், “ஐயப்பனுக்கு எப்போதெல்லாம் பிரச்னை வருகிறதோ அப்போதெல்லாம் கேரளாவில் பக்தர்கள் வெகுண்டு எழுந்து நின்று கொண்டிருக்கிறார்கள். 2018 -2019 ஆண்டுகளில் ஐயப்பனுக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டபோது கேரள மாநிலமே ஒன்றாக எழுந்து நின்றது. அதே போன்று ஓர் உணர்ச்சியை இப்போது இந்த மண்ணில் பார்க்க முடிகிறது. பந்தள மண்ணில் உணர்ச்சியோடு வந்திருக்கும் ஒவ்வொருவரும் சனாதன தர்மத்தை பாதுகாக்க வேண்டும் என்று ஒற்றைக் கருத்தோடு இங்கு வந்திருக்கிறோம். 1200 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னனுடைய வழித்தோன்றலாக பந்தள ராஜாக்கள் இங்கு வந்தார்கள். இப்போதுதான் நமக்குள் ஒரு கோடு போட்டு தமிழன், மலையாளி என பிரித்து வைக்கிறோம். 1200 ஆண்டுகளுக்கு முன்பு நமக்குள் அந்த கோடு கிடையாது. எல்லோருமே தர்மத்தை பின்பற்றக்கூடிய மக்களாகத்தான் வந்தோம். ஆகவே நான் இன்று இங்கு ஒரு தமிழனாக வரவில்லை சனாதன தர்மத்தை பாதுகாக்க கூடிய ஆயிரக்கணக்கான சிப்பந்திகளில் ஒருவனாக நான் இங்கே வந்து நின்று கொண்டிருக்கிறேன். கடந்த 20-ம் தேதி ஒரு ஆச்சரியமான விஷயத்தை நாம் பார்த்தோம். அகில உலக ஐயப்ப பக்தர்கள் மாநாடு என்ற பெயரில் கேரள மாநிலத்தின் கம்யூனிஸ்ட் அரசு ஒரு விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள். சனாதன தர்மத்தை வேரோடு அறுக்க வேண்டுமென்று நினைக்கக்கூடிய முதல்வர் ஸ்டாலின். அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் என்பது டெங்கு, மலேரியா கொசுவை போன்றது அதை ஒழிக்க வேண்டும் என சென்னையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேசினார். கேரள முதல்வர் பினராயி விஜயன் பம்பா மாநாட்டிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை அழைக்கும் போதே இது ஐயப்பனுக்காக நடத்தக்கூடிய ஒரு நிகழ்வு கிடையாது என நமக்கு தெரிந்துவிட்டது. மக்களை ஏமாற்றி அரசியலுக்கு ஓட்டு வாங்குவதற்கான ஒரு நிகழ்வு என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்துவிட்டது. நைஷ்டிக பிரம்மச்சாரியாக இருக்கக்கூடிய குழந்தை ஐயப்பனை பார்ப்பதற்கு கோடான கோடி பக்தர்கள் இங்கு வருகிறார்கள். ஆனால், கேரள முதல்வர் பினராயி விஜயனையும், தமிழக முதல்வர் ஸ்டாலினையும் நான் நாஸ்திக் டிராமாச்சாரிகள் என அழைப்பேன். நாத்திகர்களான அவர்கள் பக்தியின் பெயரால் அரசியல் நாடகம் நடத்துகிறார்கள்.

பந்தளத்தில் நடந்த சபரிமலை பாதுகாப்பு சங்கமத்தில் அண்ணாமலை

பந்தளத்தில் நடந்த சபரிமலை பாதுகாப்பு சங்கமத்தில் அண்ணாமலை

2018, 2019 ஆண்டுகளில் காவல்துறையை வைத்து ஐயப்ப பக்தர்களை அடித்து உதைத்துவிட்டு, காவல்துறையை வைத்து பெண்களை சபரிமலைக்கு அழைத்துச் சென்று வழிபடுவதற்கு அழைத்துச் சென்றார்கள். அப்படிப்பட்ட பினராயி விஜயனுக்கு ஐயப்ப மாநாடு நடத்துவதற்கு என்ன உரிமை இருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு உலக முருக பக்தர்கள் மாநாட்டை பழனியில் நடத்தினார்கள். பக்கத்தில் இருக்கும் திருடனை பார்த்து மற்றவர் திருடன் மிக எளிதாக கற்றுக் கொள்வான். தமிழ்நாட்டில் சனாதன தர்மம் வேண்டாம் என நினைக்கக் கூடிய தி.மு.க அகில உலக முருக பக்தர்கள் மாநாடு நடத்தியதை பார்த்து  இன்று கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசு அகில உலக ஐயப்பா மாநாடு நடத்துகிறார்கள். ஐயப்ப மாநாட்டில் பினராயி விஜயன் பகவத் கீதை பற்றி நமக்கு பாடம் எடுக்கிறார். பகவத் கீதையின் 12-வது அத்தியாயத்தில் கூறப்பட்ட பக்தர் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி கடவுளை நம்பாத பினராயி விஜயன் பாடம் எடுக்கிறார். அவர் அதே பகவத் கீதையில் 16-வது அத்தியாயத்தில் 21-வது ஸ்லோகத்தை பினராயி விஜயன் படிக்க வேண்டும். காமம், பேராசை, கோபம் ஆகியவை ஒரு மனிதனை நரகத்துக்கு அழைத்துபோகும் மூன்று வழிகள் என கூறப்பட்டுள்ளது. இந்த மூன்றும் கேரள கம்யூனிஸ்ட் அரசிடம் இருக்கிறது.



.

Previous Post

சாலை வசதி இல்லை.. டோலியில் சுமந்து செல்லப்பட்ட கர்ப்பிணி.. வழியிலேயே பிறந்த குழந்தை..! | இந்தியா

Next Post

துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இளம்பெண்.. விசாரணையில் ட்விஸ்ட்.. என்ன நடந்தது? | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இளம்பெண்.. விசாரணையில் ட்விஸ்ட்.. என்ன நடந்தது? | இந்தியா

துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இளம்பெண்.. விசாரணையில் ட்விஸ்ட்.. என்ன நடந்தது? | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In