Last Updated:
PM Modi Address Today: இன்று (செப்டம்பர் 21) மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார் என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாளை அமலுக்கு வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
விற்பனை மற்றும் சேவை வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, கடந்த 2017ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. இந்நிலையில், ஜிஎஸ்டி வரியில் முக்கிய சீர்திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகவும், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது மக்களுக்கு பரிசு காத்திருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 5, 12, 18, 28 என நான்கு அடுக்காக இருந்த ஜிஎஸ்டியை இனி 2 அடுக்குகளாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதன்மூலம், பல்வேறு பொருட்களின் விலை குறைய உள்ளதாகவும், ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் வரும் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 21) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார் என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
நாளை (செப்டம்பர் 22, 2025) முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்கள் அமலுக்கு வர உள்ள நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி பேசுவார் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீர்திருத்தங்கள் வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பது பற்றிய விரிவான விளக்கங்கள் அவரது உரையில் இடம்பெறலாம். இந்த புதிய நடைமுறைகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு உதவும் என்பதையும் அவர் எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சர்வதேச அரங்கில், அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு கொள்கைகள் மற்றும் H1B விசா தொடர்பான விதிமுறைகள் இந்தியத் தொழில்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலைகள் நிலவி வருகின்றன. இந்தச் சூழலில், பிரதமர் மோடி இந்த விவகாரங்கள் குறித்துப் பேசுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Delhi,Delhi,Delhi
September 21, 2025 11:30 AM IST
PM Modi Address Today : இன்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி… என்ன பேசப்போகிறார் தெரியுமா?

