Last Updated:
ராம்பூர் ஷாபாத் தாலுகாவில் வாட்ஸ்அப்பில் புகைப்படம் பார்த்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது, ஆனால் மணமகன் மாற்றம் தெரிய வந்ததால் திருமணம் ரத்து செய்யப்பட்டது.
சமீப காலமாக திருமணங்களில் எதிர்பாராத நிகழ்வுகள் நடப்பது சகஜமாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஷாபாத் தாலுகாவில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. கடைசி நேரத்தில் மணமகன் மாற்றப்பட்டிருந்தது தெரிய வந்ததால், திருமணம் ரத்து செய்யப்பட்டது. திருமணப் பொருத்தம் கூட ஆன்லைனில் நடத்தப்படும் இன்றைய காலக்கட்டத்தில், இந்த சம்பவம் அதன் சாத்தியமான ஆபத்துகளை தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
உண்மையில், இந்த திருமண நிச்சயம் வாட்ஸ்அப்பில் தொடங்கியது. வாட்ஸ் அப்பில் மாப்பிளையின் புகைப்படத்தைப் பார்த்த பிறகு குடும்பத்தினர் ஒத்துக்கொண்டனர், ஆனால் மணமகன் வந்தபோது, வாட்ஸ் ஆப்பில் அனுப்பப்பட்ட அதே நபர் அல்ல என்பது தெரியவந்தது. இந்த சம்பவமானது ராம்பூரில் உள்ள ஷாபாத் தாலுகா பகுதியில் நடந்தது.
தகவலின்படி, அந்த நகரத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் டெல்லியில் வசித்து வேலை செய்து வருகிறார். இந்த இளைஞன் அங்குள்ள ஒரு நபரை சந்தித்தார். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, தனது சகோதரிக்கு பொருத்தமான மணமகனைத் தேடி வருவதாக அவர் கூறினார். இதனையடுத்து, அந்த நபர் மணமகனின் புகைப்படத்தை வாட்ஸ்அப் மூலம் அனுப்பினார், அது குடும்பத்தினருக்குப் பிடித்திருந்தது.
திருமண தேதி செப்டம்பர் 13 என நிர்ணயிக்கப்பட்டது. மணமகன் வந்தபோது, வாகனங்களில் 7 பேர் மட்டுமே இருந்தனர், ஆனால் 30 பேர் வருவார்கள் என்று கூறப்பட்டது. மேலும் மணமகனை பார்த்ததும், வாட்ஸ்அப்பில் முதன் முதலாக அனுப்பப்பட்ட புகைப்படத்துடன் பொருந்தவில்லை என்பதால், மணமகளின் சகோதரர் பதற்றமடைந்தார். இதனையடுத்து மணமகளின் சகோதரர் சந்தேகப்பட்டு, அவரது பழைய வாட்ஸ்அப் செய்திகளையும், புகைப்படங்களையும் சரிபார்த்தார். இதனையடுத்து அவருக்கு முன்னால் நிற்கும் மணமகன், வாட்ஸ்அப்பில் அனுப்பப்பட்ட நபர் இல்லை என்றும், இவர் வேறொருவர் என்பதையும் கண்டுபிடித்தார்.
இதன் காரணமாக குடும்பத்தினர் உடனடியாக ஒரு முடிவை எடுத்து நிக்காஹ்வை ரத்து செய்து, மணமகனை திருப்பி அனுப்பினர். இதன் பிறகு, அந்தப் பெண்ணுக்கு இரவோடு இரவாக வேறொரு இளைஞனுடன் திருமணம் செய்து வைத்தனர்.
திருமண நாளன்று இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதன் முறை அல்ல. குடும்பங்கள் பிரமாண்டமான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் அதே வேளையில், மணமகனும், மணமகளும் அல்லது அவர்களாவது குடும்பங்கள் எடுக்கும் முடிவுகள் காரணமாக திருமணங்கள் ரத்து செய்வது இப்போது வழக்கமாகி வருகின்றன.
சமீபத்தில் பெங்களூரில் நடந்த ஒரு திருமணம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அதில், நான் வேற ஒருத்தரை காதலிக்கிறேன்… அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன். உங்களோட வாழ முடியாது. மன்னித்து விடுங்கள் என்று மணமகள் திருமண மேடையில் இருந்த மணமகனிடம் கூறுவதை காணலாம்.
September 20, 2025 5:11 PM IST

