குஜராத்தின் பாவ் நகரில் ரூ.34,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இதையடுத்து இந்தியாவின் வளர்ச்சிக் குறித்துப் பேசிய மோடி, இந்தியாவின் எதிரி மற்ற நாடுகளைச் சார்ந்திருத்தல்தான் என்று பேசியிருக்கிறார்.
இதுகுறித்துப் பேசியிருக்கும் மோடி, “இன்று இந்தியா “விஸ்வபந்து’ உணர்வோடு முன்னேறி வருகிறது. உலகத்தில் நமக்கு பெரிய எதிரி யாரும் இல்லை. நம்முடைய மிகப் பெரிய எதிரி, மற்ற நாடுகளைச் சார்ந்திருத்தல். இதுவே நம் மிகப் பெரிய எதிரி, இந்த எதிரியை நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து தோற்கடிக்க வேண்டும்.

பிற நாட்டைச் சார்ந்து இருக்கும் இந்த சார்புநிலை என்ற எதிரியை நாம் எப்போதும் கனவாமாக கையாள வேண்டும். வெளிநாட்டுச் சார்பு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக நாட்டின் தோல்வி இருக்கும்.
