Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

காவிரியில் மூழ்கி 4 மாணவிகள் பலியான வழக்கு – சிபிசிஐடி டிஎஸ்பி கண்காணிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 28, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
காவிரியில் மூழ்கி 4 மாணவிகள் பலியான வழக்கு - சிபிசிஐடி டிஎஸ்பி கண்காணிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
12
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை: காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி டிஎஸ்பி கண்காணிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பிள்ளிப்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “பிள்ளிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் 15 பேர் திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க பிப்.15-ல் உடற்கல்வி ஆசிரியருடன் சென்றனர்.

போட்டியில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பும்போது கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை பகுதியை சுற்றி பார்த்துவிட்டு அங்குள்ள செல்லாண்டியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு காவிரி ஆற்றில் குளிக்க இறங்கி உள்ளனர். அப்போது தமிழரசி, இனியா, லாவண்யா, சோபிகா ஆகிய 4 மாணவிகள் நீரில் மூழ்கி இறந்தனர்.

அவர்கள் இறப்பில் சந்தேகம் உள்ளது. இந்த சம்பவத்துக்கு ஆசிரியர்கள், ஆசிரியைகள் தான் காரணம். விளையாட்டுப் போட்டிக்கு சென்ற மாணவர்களைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் ஆசிரியர்களின் கடமையாகும். மாயனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விட்டு அப்படியே விட்டுவிட்டனர். பள்ளி மாணவிகளின் மரணத்துக்கு நியாயமான மற்றும் முறையான விசாரணை இல்லை. எனவே வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி நாகர்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், “முதலில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது அஜாக்கிரதையால் ஏற்பட்ட மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், “உயிரிழந்த மாணவிகளுடன் சென்ற 11 மாணவிகளிடமும் விசாரணை நடத்த வேண்டும். இதனால் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்” என்றார்.

இதையடுத்து நீதிபதி, 4 மாணவிகள் உயிரிழந்த வழக்கின் விசாரணையை புதுக்கோட்டை சிபிசிஐடி டிஎஸ்பி கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

.

Tags: உததரவஉயரகணகணகககவரயலசபசஐடடஎஸபநதமனறமபலயனமணவகளமழகவழகக
Previous Post

காங்கிரஸை கதிகலக்கும் ரெட் டைரி- கையில் எடுத்து ராஜஸ்தான் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி!

Next Post

“சுந்தரி” சீரியல் நடிகைக்கு பள்ளியில் நடந்தது என்ன?.. அது என்ன குடத்தில் மஞ்சளா..? மேடையில் செம..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“சுந்தரி” சீரியல் நடிகைக்கு பள்ளியில் நடந்தது என்ன?.. அது என்ன குடத்தில் மஞ்சளா..? மேடையில் செம..!

“சுந்தரி” சீரியல் நடிகைக்கு பள்ளியில் நடந்தது என்ன?.. அது என்ன குடத்தில் மஞ்சளா..? மேடையில் செம..!

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    பள்ளி மாணவர்களை சுற்றுலா போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது பாதுகாப்பு கொடுக்க வேண்டியது தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் மற்றும் அழைத்துச் செல்லும் ஆசிரியர் செல்லும் இடத்தில் மாணவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் இவர்களை பொறுப்பு என்று தல வழக்குகளில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனவே இந்த ஆசிரியர்கள் மீது காவல்துறை கவன குறைவாக மரணம் ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் கைது செய்து விசாரிக்க வேண்டும் இது கைது செய்து உடனடியாக ஜாமீன் நீர் விடக்கூடிய பிரிவு 304 ஏ விலை வரும் மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் இந்த அலுவலர் மீது வழக்கு தொடுப்பதோடு நஷ்ட ஈடும் பெறலாம் சம்பந்தப்பட்ட கல்வி அலுவலர்கள் சம்பளத்தில் நஷ்ட ஈடு தொகை பிடித்தம் செய்யப்படும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In