Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தனித்துவ ஓவியங்களால் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்றிருப்பவர்: ஓவியர் மாருதிக்கு முதல்வர் புகழஞ்சலி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 27, 2023 - Updated on July 28, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தனித்துவ ஓவியங்களால் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்றிருப்பவர்: ஓவியர் மாருதிக்கு முதல்வர் புகழஞ்சலி
8
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: “தனித்துவம் மிக்க தனது ஓவியங்களால் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்றிருப்பவர்” என்று ஓவியர் மாருதியின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ் வார இதழ்களில் தமது தூரிகையால் கோலோச்சி தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற ஓவியர் மாருதியின் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன்.

தனித்துவம் மிக்க தனது ஓவியங்களால் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்றிருப்பவர். மறைந்த முதல்வர் கருணாநிதியின் திரைப்படங்களில் பணியாற்றியவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், பத்திரிகை உலக நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல ஓவியர் மாருதி இன்று (ஜூலை 27) காலமானார். அவருக்கு வயது 86. புனேவில் தனது மகள் வீட்டில் தங்கியிருந்த நிலையில் பிற்பகல் 2.30 மணியளவில் உயிர் பிரிந்தது.

புதுக்கோட்டையில் 1938, ஆகஸ்டு 28-ம் தேதி டி.வெங்கோப ராவ், பத்மாவதி பாய் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் ஓவியர் மாருதி. இவரின் இயற்பெயர் ரங்கநாதன். வேலைச்சூழலின் காரணமாக, மாருதி என்ற புனைப்பெயரில் பத்திரிகைகளில் ஓவியங்கள் வரைந்து அதன் மூலம் பிரபலமானவர். தஞ்சாவூரைச் சேர்ந்த அரசு ஊழியரான விமலா என்பவரைத் திருமணம் செய்துகொண்ட ஓவியர் மாருதிக்கு சுபாஷினி, சுஹாசினி என இரு மகள்கள் உள்ளனர்.

விகடன், குமுதம், குங்குமம், கண்மணி போன்ற இதழ்களுக்கு அட்டைப்படமும், கதை – கவிதைகளுக்கு ஏற்ற ஓவியங்களும் வரைந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவரின் ஓவியத்தைப் பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி இருக்கிறது. ஓவியம் மட்டுமின்றி ‘உளியின் ஓசை’, ‘பெண் சிங்கம்’ ஆகிய திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணி செய்திருக்கிறார்.

இவரின் கைவண்ணத்தில் உருவான ‘எண்ணிலடங்கா ஓவிய தேவதைகளுக்கு கணக்கில்லாத ரசிகர்களை உருவாக்கிக் கொண்டது இவரது தனித்துவம்’ என்பது குறிப்பிடத்தக்கது.

.

Tags: இடமபறறரபபவரஓவயஙகளலஓவயரதமழதனததவநஙகநஞசஙகளலபகழஞசலமதலவரமரதகக
Previous Post

“மீசையை பார்த்ததும் ஆசை வந்துடுச்சு.இதயத்தை பறிகொடுத்த இளம்பெண்! ஓவர்தான்

Next Post

லிஸ்ட்லயே இல்லையே.. டோல்கேட்டே தான்.. திடீரென நிதின் கட்காரியை சந்தித்த.. எம் பி தமிழச்சி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
லிஸ்ட்லயே இல்லையே.. டோல்கேட்டே தான்.. திடீரென நிதின் கட்காரியை சந்தித்த.. எம் பி தமிழச்சி

லிஸ்ட்லயே இல்லையே.. டோல்கேட்டே தான்.. திடீரென நிதின் கட்காரியை சந்தித்த.. எம் பி தமிழச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In