Last Updated:
உத்தராகண்ட் டேராடூனில் மேகவெடிப்பு, கனமழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக வீடுகள் சேதம், 3 பேர் உயிரிழப்பு.
உத்தராகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால் கொட்டித் தீர்த்த மழையால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. திங்கட்கிழமை காலை முதலே கனமழை பெய்து வந்த நிலையில், இரவில் டேராடூனில் மேகவெடிப்பால் வானத்தில் இருந்து அருவி போல் மழை கொட்டியது. இதன் காரணமாக தம்சா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆற்றங்கரையோரத்தில் உள்ள தப்கேஷ்வர் மகாதேவ் கோயிலைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்தது.
இதே போன்று, நிலச்சரிவால் வீடுகள் மற்றும் சாலைகளும் பலத்த சேதமடைந்தன. இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மழை, வெள்ளத்தால் பாதித்த இடங்களை அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பொக்லைன் வாகனத்தில் சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அவர், மழை, வெள்ள பாதிப்பு குறித்து பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தொலைபேசி மூலம் கேட்டறிந்ததாக கூறினார்.
#WATCH | Uttarakhand | Tamsa river in spate and Tapkeshwar Mahadev temple inundated as heavy rainfall lashes Dehradun.
Temple priest Acharya Bipin Joshi says, “The river started flowing heavily since 5 AM, the entire temple premises were submerged… This kind of situation had… pic.twitter.com/4E6PhKBM6K— ANI (@ANI) September 16, 2025
டேராடூனில் பிரேம் நகர் பகுதியில் காட்டாற்று வெள்ளம் புகுந்தது. இதனால், அந்த பகுதியே கடல் போல் காட்சியளித்தது. வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களை மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்டனர்.
மழை, வெள்ளத்தால் டேராடூன் – ஹரித்வார் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
देहरादून के मालदेवता में अतिवृष्टि से प्रभावित क्षेत्रों का स्थलीय निरीक्षण कर अधिकारियों को आवश्यक दिशा–निर्देश दिए। आपदा के इस मुश्किल समय में हम प्रत्येक प्रभावित परिवार के साथ खड़े हैं। pic.twitter.com/74f6QKpE6N
— Pushkar Singh Dhami (@pushkardhami) September 16, 2025
சஹஸ்த்ரதாரா பகுதியில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், மார்க்கெட் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சேறு, சகதியுடன் வெள்ளம் பாய்ந்தோடியது. மேலும் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், ஏராளமான வீடுகள், பொக்லைன் உள்ளிட்ட வாகனங்கள் மண்ணில் புதையுண்டன.
கனமழை காரணமாக ரிஷிகேஷில் சாலைகள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து ஆறு போல் காட்சியளித்தது. இதனால், சாலைகளில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. இதே போன்று அங்குள்ள தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்ததால் ரயில் போக்குவரத்து முடங்கியது.
ரிஷிகேஷில் சந்தரபாகா ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் கயிறு கட்டி மீட்டனர்.
Uttarkashi,Uttarakhand (Uttaranchal)
September 16, 2025 7:12 PM IST

