இந்நிலையில் அதிமுக – பாஜக கூட்டணியில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வருகின்றன. முதலில் ஆட்சியில் பங்கு குறித்து இரு தரப்பினரும் பேசி வந்த நிலையில் சமீபத்தில் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் விலகினர்.
ஓபிஎஸ் – நயினார் நாகேந்திரன் இடையே கருத்து வேறுபாடு, எடப்பாடி பழனிசாமி – செங்கோட்டையன் இடையேயான கருத்து மோதல்கள் என கூட்டணியில் பல சிக்கல்கள் நிலவுகின்றன.
சமீபத்தில் செங்கோட்டையன், தில்லியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேசினார். அதிமுகவில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள்கள் கெடு விதித்திருந்தார்.
இந்நிலையில் பாஜகவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் இன்று சென்னையில் நடைபெறுகிறது.
