Last Updated:
சிறப்பு புலனாய்வு குழுவை பாராட்டியதுடன் அவர்களுக்கு கவுரவ ஊதியம் வழங்கலாம் என நீதிபதி தெரிவித்தார்.
வன்தாரா மறுவாழ்வு மையத்துக்கு விதிமுறைகளின்படியே விலங்குகள் வாங்கப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வுக் குழு சமர்ப்பித்த அறிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
குஜராத் மாநிலம், ஜாம்நகரில் வன்தாரா வனவிலங்குகள் பாதுகாப்பு, மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மறுவாழ்வு மையத்தை ரிலையன்ஸ் அறக்கட்டளை நடத்தி வருகிறது.
இங்கு வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக விலங்குகள் முறைகேடாக வாங்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
இதனைத் தொடர்ந்து, ஆய்வுசெய்த சிறப்பு புலனாய்வுக் குழு, தனது அறிக்கையை நீதிபதிகள் பங்கஜ் மிட்டல் (Pankaj Mithal) மற்றும் PB வரலே ( PB Varale) அமர்வில் சமர்ப்பித்தது. அதில், யானை உள்ளிட்ட விலங்குகள் வாங்கப்பட்டதில் விதிமீறல் ஏதும் இல்லை என சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்தது.
அப்போது, வன்தாரா மையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வன்தாரா மையத்துக்கு புலனாய்வுக்குழு வந்த போது விலங்குகள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன என்பது உள்ளிட்ட அனைத்தும் காண்பிக்கப்பட்டதாக கூறினார்.
இதையடுத்து நீதிபதி மிட்டல், சிறப்பு புலனாய்வு குழு அளித்த அறிக்கையில் தாங்கள் திருப்தி அடைவதாகக் கூறினார். எஸ்ஐடி அளித்த அறிக்கையை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம் என்றும் இது போன்ற ஆட்சேபனைகளை எழுப்ப யாரையும் அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார்.
நமது நாட்டிற்கு பெருமை என்று நினைக்கும் சில விஷயத்திற்கு தேவையின்றி சாயங்களை பூசி விடக் கூடாது என்றும் கூறிய நீதிபதி, நாட்டிற்கு நல்ல விஷயங்கள் நடத்த அனுமதியுங்கள் என்றார். யானைகளை சட்டவிதிகளுக்கு உட்பட்டு வாங்கி அதனை முறையாக பராமரித்தால் என்ன தவறு என நீதிபதி மிட்டல் கேள்வி எழுப்பினார்.
Delhi,Delhi,Delhi
September 15, 2025 4:29 PM IST
வன்தாரா மறுவாழ்வு முகாமிற்கு விதிமுறைகளின் படியே விலங்குகள் வாங்கப்பட்டுள்ளன – உச்சநீதிமன்றம் அறிவிப்பு

