Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

INDIA கூட்டணி மணிப்பூருக்கு செல்ல திட்டம் – கண்காணிகிறது மத்திய உளவுத்துறை..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 27, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
INDIA கூட்டணி மணிப்பூருக்கு செல்ல திட்டம் – கண்காணிகிறது மத்திய உளவுத்துறை..!
38
SHARES
61
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் அமளி நிலவியது.

இதேபோல், மாநிலங்களவையிலும் மணிப்பூர் விவகாரத்தில் அமளி காணப்பட்டது. மணிப்பூர் கலவரம் குறித்து விவாதம் நடத்த கோரி 11 கட்சிகள் நோட்டீஸ் அளித்தன. மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய்சிங் அவை தலைவர் இருக்கை அருகே சென்று அமளியில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து சஞ்சய்சிங்கை சஸ்பெண்டு செய்து மாநிலங்களவை தலைவர் ஜெகதீப்தன்கர் உத்தரவிட்டார்.

மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க தயார் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உணர்வுபூர்வமான விவகாரத்தில் உண்மை என்ன என்பதை மக்கள் தெரிந்து கொள்வது அவசியம் எனவும் தெரிவித்தார்.

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைக்கும் முயற்சியில், INDIA கூட்டணி கட்சிகள்( இந்திய தேசிய வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய கூட்டணி) , ஜூலை 26 , 2023 காலை கூட்டத்தில், மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன.

அப்போதும் மோடி அவர்கள் நாடாளுமன்றத்தில் பேச வராததால், எதிர்க்கட்சி கூட்டணியின் (INDIA) எம்.பி.க்கள் மணிப்பூருக்கு ஜூலை 29 முதல் 30 வரை செல்ல உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதை மத்திய உளவுத்துறை கண்காணித்து அவ்வப்போது டெல்லிக்கு தகவல் தருவதாக தகவல்.

Previous Post

தமிழ்நாடு அரசின் பணிபுரியும் மகளிருக்கென பிரத்தியேக விடுதிகள்! – 94999 88009 என்ற ஹெல்ப்லைன் தொலைபேசி எண் அறிவிப்பு.

Next Post

திமுக ஆட்சியில் 2 வருடத்தில் 2 லட்சம் மின் இணைப்புகள்.. அதிமுகவோடு ‘கம்பேர்’ செய்து பேசிய ஸ்டாலின்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திமுக ஆட்சியில் 2 வருடத்தில் 2 லட்சம் மின் இணைப்புகள்.. அதிமுகவோடு ‘கம்பேர்’ செய்து பேசிய ஸ்டாலின்!

திமுக ஆட்சியில் 2 வருடத்தில் 2 லட்சம் மின் இணைப்புகள்.. அதிமுகவோடு ‘கம்பேர்’ செய்து பேசிய ஸ்டாலின்!

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    இவர்கள் போவது ரொம்ப ரொம்ப லேட் போயி எந்த பிரயோஜனமும் கிடையாது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In