Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

புதுச்சேரி: சுற்றுலா பெயரில் கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்பு மோசடி! – அதிரடியாக அகற்றிய நகராட்சி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 6, 2025
in அரசியல் செய்திகள்
0
புதுச்சேரி: சுற்றுலா பெயரில் கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்பு மோசடி! – அதிரடியாக அகற்றிய நகராட்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்த நிலையில் அந்தக் கடையை விரிவாக்கம் செய்ய நினைத்தபோது, புதுச்சேரி நகராட்சி அதை அதிரடியாக அகற்றியது.

இந்த நிலையில்தான் கடற்கரை சாலையில் புதுச்சேரி சுற்றுலாத் துறையின் `லே கஃபே’ உணவகத்துக்கு அருகில் இருக்கும் இடத்தில், `I Pondy – Pondicherry information Bureau’ என்ற பெயரில் கடந்த 8 ஆண்டுகளாக தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.

சுற்றுலா தகவல் மையம் என்ற பெயரில், தனி நபர்களின், நிறுவனங்களின் விளம்பரமும் செய்யப்பட்டு வந்தன. ஆனால் அதற்காக அவர்கள் எந்த துறையிடமும், குறிப்பாக நகராட்சியிடமும் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

ஆக்கிரமிப்பை அகற்றி வரும் நகராட்சி

ஆக்கிரமிப்பை அகற்றி வரும் நகராட்சி

இந்த நிலையில்தான் சிறிய அளவில் செயல்பட்டு வந்த அந்த மையத்தை, பெரிய கூடாரமிட்டு சமீபத்தில் விரிவாக்கம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். அதைப் பார்த்த நகராட்சி ஊழியர்கள், இங்கு தகவல் மையம் அமைப்பதற்கு யாரிடம் அனுமதி பெற்றீர்கள் என்று கேட்டிருக்கின்றனர்.

அதற்கு அவர்கள் யாரிடமும் அனுமதி பெறவில்லை என்று கூறியதும், அங்கிருந்த கூடாரத்தை அதிரடியாக அகற்றி வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி ஊழியர்களிடம் கேட்டபோது, “புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை இருக்கும்போது, தனி நபர்கள் ஏன் அதை செய்ய வேண்டும் ?

அதிலும் மிக முக்கியமான கடற்கரை சாலையில், எந்தவித அனுமதியும் பெறாமல் இத்தனை ஆண்டுகள் ஆக்கிரமித்திருக்கிறார்கள்” என்றனர். புதுச்சேரி நகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு,  பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.



.

Previous Post

அதிமுக பொறுப்புப் பறிக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை: செங்கோட்டையன்

Next Post

ஜிஎஸ்டி குறைப்பு: எந்தெந்த கார்களின் விலை எவ்வளவு குறையும்?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜிஎஸ்டி குறைப்பு: எந்தெந்த கார்களின் விலை எவ்வளவு குறையும்?

ஜிஎஸ்டி குறைப்பு: எந்தெந்த கார்களின் விலை எவ்வளவு குறையும்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In