Saturday, September 19, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆக.8 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 26, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆக.8 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
9
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீட்டித்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினர், அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜூன் 14-ம் தேதி அதிகாலை கைது செய்தனர். உடல் நலக் குறைவு காரணமாக அவர், ஓமந்தூரார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.அன்றைய தினம் பிற்பகல், மருத்துவமனைக்குச் சென்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நேரில் பார்வையிட்டு, அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, இதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அங்கு சிகிச்சை முடிந்த பிறகு ஜூலை 17-ம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் புதன்கிழமையுடன் (ஜூலை 26) முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். செந்தில் பாலாஜிக்கு மூன்றாவது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.

Tags: அமசசரஆக.8கவலசநதலநடடபபநதமனறகபலஜககவர.
Previous Post

மறக்க முடியுமா சரித்திரத்தை? ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசை 1999-ல் கவிழ்த்த ஜெயலலிதா!

Next Post

கூட்டமா அது என்ன கருப்பா இருக்கு! திடீரென கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. மக்கள் செய்த மாஸ் செயல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கூட்டமா அது என்ன கருப்பா இருக்கு! திடீரென கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. மக்கள் செய்த மாஸ் செயல்

கூட்டமா அது என்ன கருப்பா இருக்கு! திடீரென கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. மக்கள் செய்த மாஸ் செயல்

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்கிறேன்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In