மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமரை பேச சொன்னதற்காக மழைக்கால கூட்டத்தொடரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் MP சஞ்சய் அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி. ஆம் ஆத்மி கட்சி ஆரம்பித்ததிலிருந்து எதிரும் புதிருமாக இருந்த காங்கிரசும் ஆம் ஆத்மியும் இன்று ஒன்று சேர்ந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.