தவெகவின் முதல் கொள்கைவிளக்க மாநில பொதுக்கூட்டம் சேலத்தில் நடந்திருந்தது. இதில், அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார். குறிப்பாக, முதல் முறையாக தவெக சார்பில் அதிமுகவை அட்டாக் செய்யும் வகையில் பேசியிருந்தார்.
ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, “திமுக பேசிப் பேசி வளர்ந்த கட்சி. ஆனால், இன்று அவர்களிடம் பேசுவதற்கு ஆளே இல்லை. கமிஷன், கட்டிங், ஷேர் என திமுக மாறிவிட்டது. தீய சக்தி திமுக, ஒரே குடும்பம் ஆட்சி செய்கிறது என்பதை உணர்ந்து எம்.ஜி.ஆர் அதிமுகவை எப்படி தொடங்கினாரோ, அதே உணர்வில்தான் தலைவர் தவெகவை தொடங்கியிருக்கிறார். எதிர்க்கட்சியாக இருக்கும் இருக்கும்போது பெரியாரியம் மார்க்சியம் என எல்லாவற்றையும் பேசுவார்கள்.
