ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
இயக்குநர் நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான டிஎன்ஏ திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் நாளை (ஜூலை 19) வெளியாகிறது.
நடிகர் தனுஷ், ரஷ்மிகா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடித்திருந்த குபேரா படம், அமேசான் பிரைம் ஓடிடியில் 5 மொழிகளில் நாளை வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் ராம் இந்திரா இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்துள்ள திரில்லர் படமான மனிதர்கள், ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகவுள்ளது.
