Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஒரு கோடி இளைஞர்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டில் வேலை… தேர்தல் நெருக்கத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதிஷ் குமார்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 16, 2025
in அரசியல் செய்திகள்
0
ஒரு கோடி இளைஞர்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டில் வேலை… தேர்தல் நெருக்கத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதிஷ் குமார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:July 15, 2025 3:22 PM IST

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அரசு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட 30 முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

பீகார் மாநிலத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக தேர்தல் ஆணையம் உட்பட அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. தற்போது ஜனதா தள் மற்றும் பாஜக கூட்டணியில், நிதிஷ் குமார் முதலமைச்சராக இருந்துவருகிறார். இந்தத் தேர்தலில், ஆளும் கட்சிக்கு முக்கிய பிரச்சினையாக இருப்பது அதிகரித்துவரும் வேலையின்மை. இதனையே எதிர்க்கட்சிகளும் கையில் எடுத்துள்ளன.

அந்த அதிருப்தியை குறைத்து இளைஞரிடத்தில் ஆட்சிக்கு ஆதரவான மனநிலையை கொண்டுவரும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது எனவும் கருத்துகள் சொல்லப்படுகின்றன.

நிதிஷ் குமார்

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், “அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு (2025 முதல் 2030 வரை), ஒரு கோடி இளைஞர்களுக்கு அரசு வேலைகள் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இலக்கை இரட்டிப்பாக்க நிர்ணயித்துள்ளோம். இதை அடைய, தனியார் துறையிலும், குறிப்பாக தொழில்துறை பகுதிகளில் புதிய வேலைகள் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இதற்காக, ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது, ஏழு தீர்வுகள் திட்டத்தின் கீழ், மாநில இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு வாய்ப்புகளுடன் இணைக்க திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், இளைஞர் திறன் மேம்பாட்டிற்கான ஏழு தீர்வுகள் திட்டத்தின் கீழ் நடந்து வரும் திட்டம் விரிவுபடுத்தப்படும்” என்று அவர் தெரிவித்திருந்தார்.

பீகாரில் கடந்த 2005 மற்றும் 2020 க்கு இடையில் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு வேலைகள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பீகாரில் திறன் மேம்பாட்டிற்காக ஒரு புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும், மாநிலத்தின் புகழ்பெற்ற தலைவரை கௌரவிக்கும் வகையில், அதற்கு ஜனநாயக் கற்பூரி தாக்கூர் திறன் பல்கலைக்கழகம் என்று பெயரிடப்படும் என்றும் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 15, 2025 3:22 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

ஒரு கோடி இளைஞர்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டில் வேலை… தேர்தல் நெருக்கத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதிஷ் குமார்



.

Previous Post

பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவை: அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

Next Post

தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?

தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In