Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மாணவிக்கு ஆபாச மெசேஜ்.. இளைஞர் மீது கொடூர தாக்குதல்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 9, 2025
in அரசியல் செய்திகள்
0
மாணவிக்கு ஆபாச மெசேஜ்.. இளைஞர் மீது கொடூர தாக்குதல்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:July 08, 2025 3:49 PM IST

கர்நாடகாவில், முன்னாள் காதலிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக கூறி, குஷால் என்ற இளைஞரை 8 பேர் கும்பல் கடத்தி கொலைவெறித் தாக்குதல் நடத்தியது.

இளைஞர் மீது தாக்குதல்இளைஞர் மீது தாக்குதல்
இளைஞர் மீது தாக்குதல்

கர்நாடகாவில் முன்னாள் காதலிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக கூறி இளைஞர் ஒருவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இளைஞர் ஒருவரை, ஒரு கும்பல் சுற்றிவளைத்து தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து சோலதேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், தாக்குதலுக்கு உள்ளானவர் நெலமங்கலா தாலுகாவைச் சேர்ந்த குஷால் என்பது தெரியவந்தது. இவரை 8 பேர் கும்பல், காரில் கடத்திச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத ஏரிக்கரை பகுதியில் வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளது.

இதை ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். அப்போது, கும்பலில் ஒருவர், நடிகர் தர்ஷனின் காதலி பவித்ரா கவுடாவுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ரேணுகாசாமியை அடித்துக் கொன்றது போன்று, இவனையும் கொலை செய்ய வேண்டும் என மிரட்டியுள்ளார். அதைக் கேட்டு அவரின் நண்பர்கள் அனைவரும் விஷமத்தனமாக சிரித்து கொக்கரித்துள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் காதல் விவகாரத்தால் இளைஞரை கடத்தி தாக்கியதை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் குஷால், கல்லூரி மாணவி ஒருவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இளைஞரின் நடவடிக்கைகள் பிடிக்காததால் மாணவி, அவரை விட்டு விலகியுள்ளார்.

பின்னர், சில மாதங்கள் கழித்து வேறொரு இளைஞரை அந்த மாணவி காதலித்துள்ளார். இதை அறிந்து ஆத்திரமடைந்த குஷால், தனது முன்னாள் காதலிக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியுள்ளார். அதுகுறித்து அந்த பெண், தனது இந்நாள் காதலனிடம் கூறி கண்ணீர் சிந்தியுள்ளார். அதைக் கேட்டு கொந்தளித்த இளைஞர், தனது நண்பர்களுடன் சேர்ந்து குஷாலுக்கு பாடம் புகட்ட திட்டமிட்டுள்ளார்.

இதையும் படிங்க: “உங்களுக்கு நல்ல மகனாக இருக்க முடியவில்லை அம்மா” – இளைஞர் விபரீத முடிவு.. கடிதத்தில் குறிப்பிட்ட இருவர்!

அதன்படி, சமாதான பேச்சு நடத்த வருமாறு குஷாலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதை நம்பி சென்ற குஷாலை, அந்த கும்பல் காரில் கடத்திச் சென்றுள்ளது. பின்னர், ஆள் இல்லாத இடத்தில் வைத்து அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கொடூர தாக்குதலில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக கூறி இளைஞர் ஒருவரை, அவரின் காதலன் தனது நண்பர்களுடன் சேர்ந்து, நடிகர் தர்ஷனின் பாணியில் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Bangalore,Karnataka

First Published :

July 08, 2025 3:49 PM IST



.

Previous Post

மேட்டுப்பாளையத்தில் இ.பி.எஸ். விவசாயிகளின் குரலோடு தொடங்கிய பயணம்

Next Post

நாடு முழுவதும் 16,000 கடவுப் பாதைகள்: ‘இன்டா்லாக்கிங்’ நிறுவ நிபுணா்கள் வலியுறுத்தல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நாடு முழுவதும் 16,000 கடவுப் பாதைகள்: ‘இன்டா்லாக்கிங்’ நிறுவ நிபுணா்கள் வலியுறுத்தல்

நாடு முழுவதும் 16,000 கடவுப் பாதைகள்: ‘இன்டா்லாக்கிங்’ நிறுவ நிபுணா்கள் வலியுறுத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In