1991-ம் ஆண்டு திமுகவுடன் பாமக கூட்டணி வைத்து தோல்வி,
1996 -ம் ஆண்டு திவாரி காங்கிரஸுடன் கூட்டணி வைத்து தோல்வி,
1998-ம் ஆண்டு அதிமுக – பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஐந்து இடங்களில் நான்கு இடங்களில் வெற்றி,
1999-ம் தி.மு.க- பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்று எட்டு இடங்களில் ஐந்து இடங்களில் வெற்றி,
2004-ம் ஆண்டு திமுக – காங்கிரஸ் கூட்டணியுடன் இணைந்து ஆறு இடங்களில் வெற்றி,
2009-ம் ஆண்டு நடந்த நாடளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று ஆறு இடங்களிலும் தோல்வி,
2014 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து எட்டு இடங்களில் 1 இடத்தில் (தரும்புரி)மட்டும் வெற்றி,
2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட ஏழு இடங்களிலும் தோல்வியை தழுவிய பாமக-வின் நாடாளுமன்ற கூட்டணி இப்படியாக இருந்தது.

1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பா.ம.க., பண்ருட்டி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. கட்சியின் முதல் சட்டமன்ற உறுப்பினராக பண்ருட்டி ராமச்சந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1996-ம் ஆண்டு தேர்தலில், திவாரி காங்கிரஸ் உடன் சேர்ந்து தேர்தலை சந்தித்த பா.ம.க 116 இடங்களில் போட்டியிட்டு, நான்கு இடங்களில் வென்றது.
2001-ம் ஆண்டு தேர்தலில், அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 27 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க., 20 இடங்களில் வென்றது.
2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில், தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 34 இடங்களில் போட்டியிட்ட போட்டியிட்ட பா.ம.க., 18 இடங்களில் வென்றது.
2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 30 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க மூன்று இடங்களில் மட்டுமே வென்றது.
2016-ம் ஆண்டு தேர்தலில், பா.ம.க-வின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டு 234 தொகுதிகளிலும் பா.ம.க தனித்துப் போட்டியிட்டது. அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்த பா.ம.க 5.3% வாக்குவங்கியைப் பெற்றது.
2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 5 இடங்களை வென்றது. இப்படி பாமக தேர்தலிலும், கூட்டணியிலும் ஏற்ற இறக்கத்தை மாறி மாறி சந்தித்தது.
