மணிப்பூர் கலவரத்தில் கடந்த 20 ம் தேதி வரை 114 குக்கி பழங்குடியினர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்த சமூகத்தை சார்ந்த 7 பாஜக MLA க்கள் கையெழுத்திட்டு கூட்டாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது..
“நாங்கள் மணிப்பூர் மக்களோடு அரசியல் கலந்தாய்வை நடத்த திட்டமிட்டுள்ளோம், அதன் மூலம் மக்களில் ஒருவராக நாங்கள் இனி நடக்கப்போவதை தீர்மானிக்க உள்ளோம். மணிப்பூர் மாநிலம் எங்களை இந்த கொடுமையிலிருந்து காப்பாற்ற தவறிவிட்டது. நாங்கள் மத்திய அரசை கேட்டுக்கொள்வதெல்லாம் இந்திய அரசிலமைப்பு சட்டத்தின் படி ஒரு தனி நிர்வாக அமைப்பை உருவாக்கி எங்களையும் மற்ற மாநிலங்களை போல அமைதியாக வாழ வைக்கவேண்டும் என்பதே. “



